வளை ஆந்தை (burrowing owl, உயிரியல் பெயர்: Athene cunicularia) என்பது ஒரு சிறிய ஆந்தை ஆகும். இது நீண்ட கால்களைக் கொண்டுள்ளது. இது வட மற்றும் தென் அமெரிக்காவின் திறந்த நிலப்பரப்புகளில் காணப்படுகிறது. புல்வெளிகள், மேய்ச்சல்நிலங்கள், வேளாண்மைப் பகுதிகள், பாலைவனங்கள் அல்லது குறைந்த தாவரங்களுடன் கூடிய வேறு எந்த வெளிப்புற உலர்ந்த பகுதியிலும் இவை காணப்படுகின்றன. இவை வளைகளில் தங்குகின்றன. தரை நாய்களால் (Cynomys spp.) தோண்டியெடுக்கப்பட்டவை போன்ற வளைகளில் தங்குகின்றன. பெரும்பாலான ஆந்தைகள் போலல்லாமல், வளை ஆந்தைகளானது பகல் நேரத்தில் சுறுசுறுப்பாக இருக்கும். எனினும் இவை மதிய வெப்பத்தைத் தவிர்க்கின்றன. அனைத்து வகையான ஆந்தைகளையும் போலவே, வளை ஆந்தைகள் அந்தியிலிருந்து விடியற்காலை வரை வேட்டையாடும். இந்நேரத்தில் இவை தங்கள் இரவுப் பார்வை மற்றும் கேட்கும் திறனைச் சாதகமாகப் பயன்படுத்துகின்றன. இவை காடுகளைத் தவிர்த்து திறந்த புல்வெளிகளில் வாழ்கின்றன. இதன் காரணமாக இவற்றிற்கு நீண்ட கால்கள் உருவாகியுள்ளன. இது வேட்டையாடும் போது வேகமாக ஓட மற்றும் பறக்க உதவுகிறது.
About the author
Related Posts
September 23, 2021
இமயமலை வரையாடு
September 29, 2021
ஒப்போசம்
October 8, 2021