செந்தலைப் பஞ்சுருட்டான் (Chestnut-headed Bee-eater, Merops leschenaulti) என்பது மரங்களை அண்டி வாழும் மெரோபிடே குடும்ப பூச்சிகளை உண்ணும் பஞ்சுருட்டான் பறவையாகும். இது இந்திய உபகண்டம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் குறிப்பாக இந்தியாவிலிருந்து தென்கிழக்காசியா வரையான பகுதிகளில் வாழ்விடமாகக் கொண்டுள்ளது.
இவ்வினங்கள் ஏனைய பஞ்சுருட்டான்கள் போன்று பிரகாசமாக நிறத்தைக் கொண்ட மெலிதான வடிவம் கொண்ட பறவையாகும். பச்சை நிறத்தை அதிகம் கொண்டும் நீல நிறத்தை பின்பகுதியிலும் வாயிற்றின் கீழ்ப்புறத்திலும் கொண்டும் காணப்படும். அதன் முகமும் தொண்டையும் மஞ்சலுடன் கருப்புக் கோடுகளுடனும் தலையுச்சி மற்றும் பிடறி ஆகிய பகுதிகள் உயர் செந்தவிட்டு நிறத்திலும் காணப்படும். மெல்லிய வளைந்த சொண்டு கருப்பு நிறமாகவிருக்கும். இருபால் பறவைகளும் ஒரே தோற்றத்தில் இருப்பினும், இள வயது பறவைகள் மங்கலான நிறத்தைக் கொண்டு காணப்படும்.
இவை 18-20செமி நீளமுடையவை. இப்பறவைகள் அதிகமாக மலைப்பிரதேசங்களில் மட்டுமே காணப்படுகிறது.
வெளி இணைப்புகள்
செந்தலைப் பஞ்சுருட்டான் – விக்கிப்பீடியா
Chestnut-headed bee-eater – Wikipedia