பாம்புக் கழுகு (Snake eagle) என்பது பாறுக் குடும்பத்தைச் சேர்ந்த கொன்றுண்ணிப் பறவை ஆகும். இவை பொதுவாக ஆப்பிரிக்காவில் காணப்படுகின்றன. இவை வட்டத் தலையும் பரந்த இறகுகளும் கொண்டவை. இவை பொதுவாக பாம்பு மற்றும் பல்லி இனங்களை உண்கின்றன. சில நேரங்களில் சிறிய பாலூட்டிகளையும் உண்கின்றன.
இனங்கள்
சிறுகால்விரல் பாம்புக் கழுகு, Circaetus gallicus
கருமார்பு பாம்புக் கழுகு, Circaetus pectoralis
பியுடோயினின் பாம்புக் கழுகு, Circaetus beaudouini
பழுப்பு பாம்புக் கழுகு, Circaetus cinereus
தெற்கு பட்டைப் பாம்புக் கழுகு, Circaetus fasciolatus
மேற்கு பட்டை பாம்புக் கழுகு, Circaetus cinerascens
காங்கோ பாம்புக் கழுகு, Circaetus spectabilis
வெளி இணைப்புகள்
பாம்புண்ணிக் கழுகு – விக்கிப்பீடியா
Circaetus – Wikipedia