கொண்டை பாம்புண்ணிக் கழுகு

பாம்புண்ணிக் கழுகு (crested serpent eagle, Spilornis cheela) இப்பறவை ஊன் உண்ணிப் பறவைகளில் நடுத்தர தோற்றம் கொண்ட பறவையாகும். ஆசியாக் கண்டத்தில் வெப்ப மண்டலப்பகுதிகளில் அதிகமாக காணப்படுகிறது. மேலும் இந்தியத் துணைக்கண்டத்தில் அமைந்துள்ள பல நாடுகளிலும், தென்கிழக்காசியா, கிழக்காசியா, போன்ற பகுதிகளிலும் பரவலாகக் காணப்படுகிறது. இப்பறவை பார்ப்பதற்கு அந்தமான கழுகைப்போலும், நிகோபார் தீவுக் கழுகைப் போலும் தோற்றம் கொண்டது. இப்பறவை பாம்புகளைப்பிடித்து உண்பதால் இதற்கு இப்பெயர் வந்துள்ளது. பிலிபைன்சு கழுகும் இவ்வினத்தை ஒத்ததாக உள்ளது.


விளக்கம்


நடுத்தர உடல் தோற்றம் கொண்ட இப்பறவை அடர் பழுப்பு நிறம் கொண்டு காணப்படுகிறது. வட்டமா பெரிய இறக்கைகள் உயரத்தில் பறக்கவும், திசையை மாற்ற குறுகிய வாலும் தடித்தில் கழுத்தும் கொண்டு காணப்படுகிறது.


வெளி இணைப்புகள்

கொண்டை பாம்புண்ணிக் கழுகு – விக்கிப்பீடியா

Crested serpent eagle – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published.