ஐரோப்பிய ஈ பிடிப்பான் (European Bee-eater, Merops apiaster) அல்லது ஐரோப்பிய பஞ்சுருட்டான் என்பது ஈபிடிப்பான் இனத்தைச் சேர்ந்த ஒரு சிறு பறவையினமாகும். தென் ஐரோப்பாவிலும் வட ஆப்பிரிக்காவின் சில பகுதிகளிலும் மேற்காசிய நாடுகள் வரையிலும் பரவலாகக் காணப்படுகிறது. ஈக்களையே முதன்மையான இரையாகக் கொள்ளும் இப்பறவைகள் புல்வெளிகளிலும் அடர்த்தியற்ற புதர்களிலும் காடுகளிலும் காணப்படும். இவை வால் பகுதியையும் சேர்த்துப் பொதுவாக 27 முதல் 29 செ.மீ நீளம் இருக்கும். மேற்புறம் பழுப்பு மற்றும் மஞ்சள் வண்னமும் சிறகுகள் பச்சையாகவும் அலகு கறுத்த நிறத்திலும் காணப்படும். இவை பனிக்காலத்தில் ஆப்பிரிக்கா வழியாக இந்தியா, இலங்கை போன்ற பகுதிகளுக்கு வலசை செல்கின்றன.
About the author
Related Posts
September 16, 2021
ஆப்பிரிக்க யானை
September 28, 2021
அமெரிக்கக் காட்டெருது
September 22, 2021