வளர்ப்பு வல்லூறு

வளர்ப்பு வல்லுறு (Falconry) என்பது வன விலங்குகளை அதன் இயற்கை வாழிடங்களில் வேட்டையாட பயிற்றுவிக்கப்பட்ட கொன்றுண்ணிப் பறவை ஆகும். தற்காலத்தில் வளர்ப்பு வல்லுறுகளாக செவ்வால் பாறு (Buteo jamaicensis), ஹாரிஸ் பாறு (Parabuteo unicinctus), பொரி வல்லூறு (Falco perigrinus) போன்ற பறவைகள் வளர்க்கப்படுகின்றன.


துவக்கக்கால ஆங்கில புனைகதை இலக்கியங்களில் “ஃபால்கோன்” (falcon) என்ற சொல்லானது பெண் வல்லுறுவை மட்டுமே குறிக்கப் பயன்பட்டது. அதே நேரத்தில் “ஹாக்” (hawk அல்லது hawke) அல்லது “ஹாக்” என்ற சொல்லும் ஒரு பெண் பாறுவைக் குறிப்பிடப் பயன்படுத்தப்பட்டது. ஆண் ஹாக் (பாறு) அல்லது ஃபால்கோன் (வல்லூறு) ஆகியவற்றைக் குறிக்க “tiercel” என்ற சொல் பயன்படுத்தப்பட்டது. ஏனென்றால் ஆண் பறவை பெண் பறவையின் அளவில் சுமார் மூன்றில் ஒரு பங்கே இருந்தது.


வரலாறு


தொல்நெடுங்காலமாக மனிதர்கள் இதுபோன்ற சில இரைக்கொல்லி உயிரினங்களைப் பிடித்துப் பழக்கி, அதைக் கொண்டு வேட்டையாடி வந்துள்ளனர். முதலில் இறைச்சிக்காக நடத்தப்பட்ட இந்த வேட்டை, காலப்போக்கில் ஒரு சாகச விளையாட்டாகப் பரிணமித்தது. மொகலாயப் பேரரசர்கள் அவுரங்கசீப், ஜஹாங்கீர் போன்றவர்கள் இந்த விளையாட்டில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர்கள். தன் அரசவை ஓவியரைத் தனது வல்லூறைச் சிற்றோவியமாக ஜஹாங்கீர் வரையச் செய்தார். இந்த வேட்டை விளையாட்டு 1980களில் இந்தியாவில் தடை செய்யப்பட்டது.


தற்காலத்தில் இந்த விளையாட்டுக்காக வல்லூறுகள், காப்பிட இனப்பெருக்க முறையில் வளர்க்கப்பட்டு, பயிற்சி அளிக்கப்படுகின்றன. ஒரு வல்லூறை வளர்த்து, பயிற்சியளிப்பது என்பது மிகுந்த செலவாகும் என்பதால், இது மன்னர்களின் விளையாட்டு என்றறியப்பட்டது. மத்தியக் கிழக்கு நாடுகளில் பரவியிருந்த இந்தச் சாகச விளையாட்டு இப்போது அமெரிக்கா, பிரிட்டன் உட்பட ஐம்பது நாடுகளில் பிரபலம் அடைந்துள்ளது. சில ஆண்டுகளுக்கு முன் யுனெஸ்கோ இதை ஒரு பொழுதுபோக்காக அங்கீகரித்தது. சாகசத்துக்காக மட்டுமல்லாமல் மைனா, கொக்கு போன்ற பறவைகளை விமான தளத்திலிருந்து விரட்ட, இவை பயன்படுத்தப்படுகின்றன.


வெளி இணைப்புகள்

வளர்ப்பு வல்லூறு – விக்கிப்பீடியா

Falconry – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published.