பூனைப் பருந்து (harrier) என்பது பகலாடி இனத்திலுள்ள, அக்சிபிரிடே குடும்பத்தைச் சேர்ந்த ஓர் கொன்றுண்ணிப் பறவை ஆகும். பூனைப் பருந்து திறந்த வெளிகளின் மேலாக தாழ்வாகப் பறந்து சிறு பாலூட்டிகள், ஊர்வன அல்லது பறவைகளை வேட்டையாடும் தன்மையுடையது. உலகம் முழுவதும் சுமார் 16 வகையான பூனைப் பருந்து இனங்கள் உள்ளன. அவற்றில் மோண்டாகு ஹாரியர், பேல்லிட் ஹாரியர், யுரேசியன் மார்ஷ் ஹாரியர் உள்ளிட்ட சுமார் 5 வகையான பறவைகள் இந்தியாவுக்கு வலசை வந்து செல்லும் வழக்கத்தைக் கொண்டிருக்கின்றன. இவற்றின் வாழிடம் வறண்ட, புல்வெளி நிலங்கள். எனவே இந்தியாவில் ராஜஸ்தானில் உள்ள தால் சப்பார் சரணாலயம், குஜராத்தில் உள்ள வேலவதார் தேசியப் பூங்கா, ‘லிட்டில் ரான் ஆஃப் கட்ச்’, ஆந்திராவில் ரோல்லபடு சரணாலயம் போன்ற பகுதிகளில் அதிக அளவில் இவற்றைக் காண முடியும். இவற்றின் வாழிடங்களான புல்வெளிகள்கள் அழிக்கப்பட்டுவருவதால் இந்தப் பறவைகளின் எண்ணிக்கையும் குறைந்துகொண்டே வருகின்றன.
About the author
Related Posts
September 28, 2021
மலைச்சிங்கம்
September 20, 2021
ஓந்தி
September 17, 2021