பருந்து, பறவை வகுப்பைச் சேர்ந்த ஒரு ஊனுண்ணி ஆகும். இவற்றிற்கு நீண்ட சிறகுகளும் பலம் குறைந்த கால்களும் அமைந்திருக்கும். இவ்வகுப்பில் உள்ள இனப்பறவைகள் பெரும்பாலும் உயிரற்ற விலங்குகளையே உணவாக்கிக் கொள்கின்றன. சில இனங்கள் கொன்றுண்ணிப் பறவைகள் ஆகும்.
கருடன் பருந்து இனத்தைச் சேர்ந்த ஒரு பறவை ஆகும்.