பெயர்கள்
தமிழில் :பொரிப்புள்ளி ஆந்தை
ஆங்கிலப்பெயர் :Mottled Wood- Owl
அறிவியல் பெயர் :Strix – ocellata
உடலமைப்பு
48 செ.மீ. – குண்டான தோற்றமும் தரும். இதற்கு காதுத் தூவிகள் இல்லை. முகம் வெள்ளையானது. உடலில் சிவப்பு, பழுப்பு, கருப்பு, வெள்ளை எனப் பல வண்ணங்களில் புள்ளிகளும் நெளியான சிறு கோடுகளும் கொண்டதாக அழகான வயிறும் வெளிர்மஞ்சளாக கருப்புப் பட்டைகளுடன் காட்சி தரும்.
காணப்படும் பகுதிகள் & உணவு
தமிழகம் எங்கும் அடர்த்தியற்ற மரங்கள் நிற்கும் காடுகள், மாந்தோப்புகள், பெரிய புளியமரங்கள் நிற்கும் தோப்புகள் ஆகியவற்றில் ஊர்ப்புறங்களைச் சார்ந்து திரியும் பகலில் இணையாக மரங்களில் பதுங்கி இருந்து இரவில் வெளிப்பட்டு எலி, சுண்டெலி, பறவைகள், ஓணான், நண்டு ஆகியவைகளை இரையாகத் தேடித்தின்னும் பகலில் தொந்தரவு ஏற்பட்டால், சூரிய ஒளியினைப் பொருட்படுத்தாது தூரமாகப் பறந்து சென்று வேறொரு மரத்தில் அமரும்.
இனப்பெருக்கம்
இனப்பெருக்கப் பருவத்தில் ஹீரட் ட்யுஹீ என மறைவிடத்திலிருந்து வெளிப்படும் முன் குரல் கொடுக்கும் பிற ஆந்தை இனத்தைப் போல மரங்களின் புறக்கிளைகளில் அமராது உயர இலைதழைகளிடையே மறைவாக அமரும் பழக்கம் கொண்டது.ஜனவரி முதல் மார்ச் முடிய மரப்பொந்துகளிலும் பாறை இடுக்குகளிலும் சில குச்சிகள் இறகுகள் ஆகியவற்றை வைத்து 2 முட்டைகள் இடும்.