நீலகிரி ஈப்பிடிப்பான் (Nilgiri Flycatcher, உயிரியல் பெயர்: Eumyias albicaudatus) என்பது நீலகிரி உயிர்க்கோளக் காப்பகத்தில் காணப்படும் ஒரு வகைப் பறவை ஆகும். இது வெர்டிட்டர் ஈப்பிடிப்பான் போலவே இருப்பதால், நீலகிரி வெர்டிட்டர் ஈப்பிடிப்பான் என்றும் முன்னர் அழைக்கப்பட்டது. வெர்டிட்டர் ஈப்பிடிப்பானும் குளிர்காலத்தில் நீலகிரிக்கு வருகிறது. எனினும் அது வெளிர் நீல நிறத்தில் இருக்கும். இதன் வாலின் அடிப்பகுதியில் இரண்டு சிறிய வெள்ளை திட்டுகள் உள்ளன. இது மேற்குத் தொடர்ச்சிமலையின் சோலைக்காட்டில் அதிக உயரத்திலும் மற்றும் நீலகிரி மலைகளிலும் காணப்படுகிறது.
About the author
Related Posts
October 11, 2021
கொலோன் கரணப் புறா
July 12, 2021
பன்னீர் மரம்
September 20, 2021