நீலகிரி சோலைக்கிளி [Nilgiri blue robin (Sholicola major)] அல்லது வடக்கத்தி சோலைசிட்டு என்பது பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தால் அருகிய இனம் [EN] என்று செம்பட்டியலில் இடப்பட்ட ஒரு அகணிய உயிரி ஆகும். சில வருடங்கள் முன்பு வரை Sholicola albiventris உடன் வேறுபடுத்தப்படாமல் ஓரினமாகவே கருதப்பட்டு வந்தது.
உடலமைப்பும் கள அடையாளங்களும்
பெண்: சற்று வெளிரிய நிறத்துடன் காணப்படும்.
பரவல்
நீலமலையில் பாலக்காட்டுக் கணவாய்க்கு வடக்கேயுள்ள தென் கருநாடக, தென்மேற்குத் தமிழக சோலைக்காடுகளில் மட்டுமே காணப்படும் ஓரிட வாழ்வி.
வாழ்விடம்
சோலைக்காடுகளில் மரங்களின் கீழ்ப்பகுதிகள்; 900–2100 m உயரம் வரை இவற்றைக் காணலாம்.
உணவும் உணவு தேடும் முறையும்
உணவு பற்றி இன்னும் தெளிவாக அறியப்படவில்லை (பூச்சிகளாக இருக்கலாம்); தரையில் கிடக்கும் மரங்களுக்கு இடையில் உணவு தேடும்.