பொரி வல்லூறு

பொரி வல்லூறு (peregrine falcon, Falco peregrinus) என்பது ஒரு பல்கொய்ன்டே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு கொன்றுண்ணிப் பறவை ஆகும். இது ஒரு பெரிதான, காகத்தின் அளவுகொண்ட வல்லூறு ஆகும். இது நீல-பழுப்பு நிறத்தை பின்னும், கீழ்ப்பகுதியில் வெள்ளையும், கருப்புத் தலையும் கொண்டு காணப்படும். இதன் கண்கள், கால்கள், அலகு போன்றவை மஞ்சள் நிறத்தில் இருக்கும். இது பாம்பு, எலி, வாத்து, நீர்ப் பறவை போன்றவற்றை பிடித்து உண்ணும் பறவையாகவும், பால் ஈருருமை உடையதாகவும், ஆண் பறவையைவிட பெண் பறவை சற்று பெரியனவாக இருக்கும். பொரி வல்லூறு அதன் வேகத்திற்கானப் புகழ் பெறுகிறது. இதன் வேகம் வேட்டையாட கீழே குதிக்கும்போது 322 km/h (200 mph) வரைக்கு மேல் செல்வதால் இது உலகிலேயே அதி வேகமாக பறக்கும் பறவையாக உள்ளது. தேசிய புவியியல் தொலைக்காட்சி நிகழ்ச்சியின்படி, இதனுடைய அதி உச்ச வேகமான 389 km/h (242 mph) பதிவு செய்யப்பட்டுள்ளது.


வெளி இணைப்புகள்

பொரி வல்லூறு – விக்கிப்பீடியா

Peregrine falcon – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published.