பிலிப்பைன் கழுகு (Philippine eagle, Pithecophaga jefferyi) அல்லது குரங்கு உண்ணும் கழுகு என்பது பிலிப்பீன்சு நாட்டைச் சேர்ந்த இரைதேடியுண்ணும் பறவை ஆகும். இது இந்நாட்டின் தேசியப் பறவை ஆகும். இதனை உள்ளூர் வாசிகள் “பட்டம்”, “பறவைகளின் அரசன்” என்றெல்லாம் அழைக்கின்றனர். இப்பறவை மண்ணிறவெள்ளை நிற இறகுகளையும், கரடுமுரடான முகடையும் கொண்டுள்ளது. இதன் நீளம் 86 தொடக்கம் 102 செ.மீ ஆகும். அத்துடன் இதன் நிறை 4.7 தொடக்கம் 8.0 கிலோகிராம் ஆகும். நீளத்தின் அடிப்படையில் பிலிப்பைன் கழுகே உலகின் மிகப் பெரிய கழுகென்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். பிலிப்பைன் கழுகு சட்டத்தினால் இங்கு பாதுகாக்கப்பட்டு வருகின்றது.
About the author
Related Posts
September 28, 2021
கடற்பாம்பு
September 23, 2021
பீட்டல் ஆடு
September 30, 2021