செந்தலைக்கழுகு

செந்தலை பிணந்தின்னிக் கழுகு அல்லது செந்தலைப் பாறுக் கழுகு (Red-headed Vulture) இவ்வகையான பறவைகள் இந்தியப்பகுதிகளிலும் மேலும் தென்கிழக்காசியாப் பகுதிகளில் ஒன்றிரண்டுமாக காணப்படும் ஊன் உண்ணிப் பறவையாகும். இதனைப் பாண்டிச்சேரி கழுகு என்றும் அழைக்கிறார்கள்.


விளக்கம்


இப்பறவை நடுத்தர வளர்ச்சியுடைய பறவையாகும். இதன் நீளம் சிறகு விரிந்த நிலையில் 76 முதல் 86 செமீ வரை உள்ளது. இதன் எடை 3.5 கிலோ முதல் 6.3 கிலோ வரை உள்ளது. இவ்வகைப் பறவைகளில் வயது முதிர்ந்த கழுகுகளுக்கு முடியே இல்லாமல் சிவந்த தோல் வெளியில் தெரிந்த தலையுடன் காணப்படுகிறது. இவற்றில் ஆண் பெண் இனங்களை இதன் கண்களில் உள்ள கருவிழிகொண்டே பிரித்துப்பார்கமுடியும். பெண் பறவையின் கருவிழி பழுப்பு கலந்த இருட்டாகவும், ஆண்களில் கருவிழி மங்களான வெள்ளை நிறத்திலும் காணப்படுகிறது.


வகைப்பாடு மற்றும் தொகுப்பியல்


இந்தியத்துணைக்கண்டத்தில் காணப்படும் பழைய காலத்தைச் சார்ந்த கழுகு இதுதான். இப்பறவைக்கு கிளை இனங்கள் எதுவும் அறியப்படவில்லை.


பரவல் மற்றும் உறைவிடம்


செந்தலைக்கழுகுகள் அபரிமிதமாகக் காணப்படுவது இந்தியத்துணைக்கண்டப் பகுதிகளில் தென் கிழக்குப்பகுதிகளிலும், தென் மேற்கில் அமைந்துள்ள மலைப்பகுதிகளிலும், சிங்கப்பூர் போன்றவற்றிலும் மட்டுமே காணப்பட்டது. தற்போதைய காலங்களில் வட இந்தியப் பகுதிகளிலும் காணப்படுகிறது. இவற்றின் இனப்பெருக்கம் பொதுவாக கைவிடப்பட்ட நிலப்பகுதி, விவசாய நிலப்பகுதி போன்றவற்றிலேயே அமைந்திருக்கிறது. பொதுவாக இப்ப்றவை கடல் மட்டத்திலிருந்து 300 மீட்டர்கள் உயரம் உள்ள பகுதிகளிலேயே காணப்படுகிறது.


பாதுகாப்பு நிலை


இப்பறவை 2004 ஆம் ஆண்டு உலக உயிர்கள் பாதுகாப்புச் சங்கத்தின் கணக்குப்படி அழிவு நிலையிலிருந்து கணக்கெடுத்து பாதுகாக்கும் நிலைக்கு உள்ளதாகத் தெரிவித்துள்ளது.


சமீபத்திய ஆண்டுகளில் இந்தியா போன்ற நாடுகளில் கால்நடைகளுக்கு கொடுக்கப்படும் மருந்தான டைக்ளோஃபீனாக் என்ற ஒரு மருந்தின் காரணமாக இவைகள் விரைவாக அழிந்து வருகிறது. இவ்வகையான கழுகுகள் 1990 ஆம் ஆண்டுகளுக்கு பிற்பகுதியில் இருபது ஆண்டுகளில் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்துவிட்ட நிலைக்கு உட்பட்டுவிட்டது. 2007 ஆம் ஆண்டு பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் வெளியிட்ட பட்டியலில் இப்பறவை அழிந்து விட்டதாக வெளியிட்டது.


வெளி இணைப்புகள்

செந்தலைக்கழுகு – விக்கிப்பீடியா

Red-headed vulture – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published.