தரைப்பருந்து, நெடுங்கால் பாம்புப்பருந்து அல்லது நெடுங்காற்கழுகு (secretary bird; Sagittarius serpentarius) என்பது மிகவும் பெரிய, அதிகமாக தரையில் காணப்படும் கொன்றுண்ணிப் பறவை ஆகும். இது ஆப்பிரிக்காவின் அகணிய உயிரியும், பொதுவாக துணை ஆப்பிரிக்காவின் திறந்த புல் நிலங்களில் காணப்படுகிறது. இது பிற பகலாடி கொன்றுண்ணிப் பறவைகளான பருந்துகள், பாறுகள், பிணந்தின்னிக் கழுகுகள், பூனைப் பருந்துகள் ஆகியவற்றின் வரிசையான அசிபிட்ரிபோம்களின் அங்கத்துவமாக உள்ளது.
இப்பறவை சூடான், தென்னாப்பிரிக்கா ஆகியவற்றின் சின்னங்களில் இடம் பெற்றுள்ளது.