பெரிய காட்டு ஆந்தை

பெரிய காட்டு ஆந்தையானது (Forest Eagle Owl, Bubo nipalensis) தென்கிழக்கு ஆசியா மற்றும் இந்திய துணைகண்டத்தில் காணப்படும் ஒர் இரவாடி இனமாகும்.


உடலமைப்பு


63 செ.மீ. – குண்டான தோற்றமும் கரும்பு பழுப்பு நிறமான உடலும் கொண்டது. பழுப்பு நிறப்பட்டைக் கோடுகளும் சிறு திட்டான பழுப்புப் புள்ளிகளும் உள்ள மார்பையும் வயிற்றையும் கொண்டது.


காணப்படும் பகுதிகள் & உணவு


மேற்கு கிழக்குத் தொடர்ச்சி மலைசார்ந்த பசுமைமாறா அடர்காடுகளில் உயர் அடத்தியான கிளைகளில் தூங்கியபடி பொழுதைக்கழிக்கும். இரவில் வெளிப்பட்டு காடை, கௌதாரி, முயல் ஓணான், பாம்பு ஆகியவற்றை வேட்டையாடுவதோடு மலைவாழ் மக்கள் வாழ்விடங்களில் நுழைந்து அவர்கள் வளர்க்கும் கோழி, புறா, பூனை ஆகியவற்றையும் தூக்கிச் செல்லும். காட்டில் இறந்து கிடக்கும் புலி முதலான பெரிய விலங்குகளின் இறைச்சியையும் தின்பதுண்டு. ஆழ்ந்த குரலில் நெடுந்தொலைவு கேட்கும்படியாக ஹீட் ஹீட் எனக் கத்தும்.


இனப்பெருக்கம்


டிசம்பர் முதல் ஜனவரி முடிய வயதான பெரியமரப் பொந்துகளிலும் கழுகு முதலான பறவைகள் கட்டிய பழைய கூட்டிலும் பாறை இடுக்குளிலும் மலைக்குகைகளில் தரையிலும் ஒரு முட்டை மட்டும் இடும். கூட்டை நெருங்குபவர்களைக் கோபத்தோடு தாக்கும்.வெளி இணைப்புகள்

பெரிய காட்டு ஆந்தை – விக்கிப்பீடியா

Spot-bellied eagle-owl – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published.