இலங்கை விரிகுடா ஆந்தை

இலங்கை விரிகுடா ஆந்தை (Sri Lanka bay owl) டைடோனிடிசு (Tytonidae) என்ற குடும்பத்தைச் சார்ந்த இப்பறவை ஒரு வித விரிகுடா ஆந்தை (Bay owl) இனத்தைச் சார்ந்ததாகும். இதன் உடல் நீளம் 29 செ. மீற்றர்களுடனும், சிறகுகள் விரிந்த நிலையில் 192 முதல் 208 மில்லி மீற்றர்கள் வரையிலும் இருக்கும். இதன் வால் பகுதி 81 முதல் 90 மில்லி மீற்றர்கள் வரை உள்ளது. இவற்றின் உணவு சிறிய கொறித்து உட்கொள்ளும் எலி போன்ற விலங்குகள் ஆகும். இவ்வகையான பறவைகள் இலங்கைத் தீவுப்பகுதி தென் மேற்கு இந்தியப்பகுதியில் அமைந்துள்ள மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர் போன்ற பகுதிகளில் ஓரிட வாழ்வியாக வாழுகின்றன. சில நேரங்களில் இப்பறவை துணையினமான கிழக்கத்திய விரிகுடா ஆந்தை என்று கருதப்படுகிறது.


இவற்றின் வாழ்விடங்கள் அயன அயல் மண்டலம், வெப்ப வலயம் அல்லது அதிகமான மழையைப்பெரும் காடுகள் மற்றும் உயரமான புல்வெளிப் பகுதிகள் போன்ற இடங்கள் ஆகும். இவை வாழும் பகுதிகளை அழிப்பதின் காரணமாக அழிவும் தருவாயில் இவை உள்ளன.


வெளி இணைப்புகள்

இலங்கை விரிகுடா ஆந்தை – விக்கிப்பீடியா

Sri Lanka bay owl – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published.