வெள்ளை முதுகு பிணந்தின்னிக் கழுகு (white-backed vulture (Gyps africanus) அல்லது ஆப்ரிக்கக் கழுகு என்பது ஒரு கழுகு ஆகும். இது ஒரு ஆகாயத்தோட்டியாகச் செயல்படுகிறது இறந்த விலங்குகளை உண்டு ஊரைச் சுத்தமாக்குகிறது.
விளக்கம்
இது பார்க்க அழகற்ற வெறுப்பூட்டும் தோற்றமுடைய கனத்த பறவையாகும். இதன் கழுத்து தலை ஆகியன முடியின்றி சுருக்கம் விழுந்து காணப்படும். இப்பறவை 4.2 இல் இருந்து 7.2 கிலோ கிராம் எடையும், 78இல் இருந்து 98 செமீ (31 to 39 இன்ச்) நீளமும், இறகுவிரிந்த நிலையில் 1.96 இல் இருந்து 2.25 மீட்டர் (6 to 7 அடி) அகலம் இருக்கும். இது உயர்ந்த மரங்களில் கூடுகட்டுகிறது ஒரே முட்டைதான் இடுகிறது.