ஆசியப் பனை உழவாரன் (Asian palm swift), (அறிவியல் பெயர்:Cypsiurus balasiensis) என்பது ஆசியா கண்டத்தில் உள்ள இந்தியா, பிலிபைன்ஸின் போன்ற நாடுளில் வாழும் சிறிய வகை உழவாரக்குருவி வகையைச் சேர்ந்தது ஆகும்.
இப்பறவையானது பொதுவாக இந்தியா மற்றும் பிலிபைன்ஸின் வெப்ப மண்டல காடுகளில் பனை மரங்களில் கூடு கட்டி வாழும் தகவமைப்பைப் பெற்றுள்ளது. இவை அநேக நேரங்களில் பனிமரத்தைச் சுற்றியே பறந்து திரியும். அதோடு பனை ஓலைகளில் தனது எச்சில் மூலம் கூடுகட்டி இரண்டு மூன்று முட்டைகளை இடுகிறது. இப்பறவையின் வாழ்வாதாரப்பகுதியாக பனையை மட்டுமே நம்பிவாழுகிறது.
இதன் உணவு சிறிய பூச்சிகள் ஆகும். இவை இப்பூச்சிகளைப் பறந்து கொண்டே உணவாகப் பிடித்து உட்கொள்ளும் தகவமைப்பைப் பெற்றுள்ளது. இதன் இறகு 13 செமீ நீளம் கொண்டவையாகும். இதன் இறகுகளை விரித்துப் பறக்கும்போது பூமராங்கைப்போல் இவை காணப்படும். இதன் உடல் மெலிந்து காணப்பட்டாலும், வால் பகுதியை விரித்து பறக்கும்போது பெரிய பறவைபோல் காணப்படும். பறந்து கொண்டே பலமாகச் சத்தம் கொடுக்கும் குணம் கொண்டது. கால்கள் மூலம் பெரிய பறவைக்கும் சிறிய பறவைக்கும் உள்ள வித்தியாசத்தைக் கண்டுபிடிக்கலாம். இதன் கால்கள் குட்டையாக இருக்கும். இவை தரைப்பகுதியைப் பயன்படுத்துவதில்லை என்பதால் பனையின் ஓலைகளில் தொங்கிக்கொண்டிருப்பதைப் பார்கக முடியும்.
வெளி இணைப்புகள்
ஆசிய பனை உழவாரன் – விக்கிப்பீடியா