கரிய அரிவாள் மூக்கன் அல்லது செங்கழுத்து அரிவாள் மூக்கன் அல்லது இந்திய கரிய அரிவாள் மூக்கன் (ஆங்கிலத்தில்: Black ibis அல்லது Red-naped ibis; Pseudibis papillosa) என்பது அரிவாள் மூக்கன் குடும்பத்தைச் சேர்ந்த கருநிறப் பறவையாகும். இது இந்தியத் துணைக்கண்டத்தின் சில இடங்களில் காணப்படுகின்றது. இதன் கால்கள் செம்மண் நிறச்சிவப்பானவை. முடியில்லாத தலையும் தோளின் அருகே நன்றாகத் தெரியும் வெள்ளைப் பட்டையும் இதன் அடையாளங்களாகும். கருந்தலை அரிவாள் மூக்கன்கள் விவசாயத்துக்காகப் பண்படுத்தப்பட்ட நிலங்களையொட்டித் திறந்த வெளியில் கூட்டமாக நின்று மேயக்கூடியவை.
இது அரிவாள் மூக்கன் இனத்திலுள்ள மற்ற பறவைகளைப் போன்று நீர்நிலைகளில் மட்டுமில்லாமல் வறண்ட நிலத்திலும் காணப்படும்.
வெளி இணைப்புகள்
கரிய அரிவாள் மூக்கன் – விக்கிப்பீடியா