பெரிய பச்சைக்கிளி (Alexandrine Parakeet, Psittacula eupatria) என்பது கிளி இன வகைளில் ஒன்று ஆகும். இவ்வினக் கிளிகள் பேரரசன் அலெக்சாந்தரின் பெயரைக் கொண்டு ஆங்கிலத்தில் அழைக்கப்பட்டன. அலெக்சாந்தர் பஞ்சாப் பகுதி முதல் ஜரோப்பா மற்றும் மத்தியதரைக்கடல் பிரதேசங்களிலிருந்து சில இனப் பறவைகளை ஏற்றுமதி செய்தமைக்காக இப்பெயர் வழங்கப்பட்டது. இக் குறிப்பிட்ட பகுதிகளில் இவ்வினக் கிளிகள் உயர்தரம் மற்றும் அரச முக்கியத்துவம் என்பவற்றுக்கான விலை மதிப்பானவையாகக் கருதப்பட்டன. இவை சாதாரண பச்சைக்கிளிகள் போலவே இருக்கும் இவைகளின் கழுத்தில் வளைய வடிவில் சிவப்பு நிறமும் இறகில் சிவப்பு நிறமும் இடம்பெற்றிருக்கும். சாதாரண கிளிகளைவிட சற்று பெரிதாக இருக்கும். இந்த வேறுபாடுகள்தான் இவற்றை சாதாரண கிளிகளிலிருந்து வேறுபடுத்துகின்றன. இக்கிளிகளை குஞ்சு பருவத்திலிருந்தே வீட்டில் வளர்த்தால் பேசும் திறன் பெறும். மேலும் வளர்பவர்களிடம் அன்பாகப் பழகும். இதனால் இதை வீட்டில் வளர்பர். இக்கிளிகள் அழிய வாய்ப்புள்ள இனமாக இருப்பதால் இந்தியாவில் இவற்றை வளர்ப்பதோ அல்லது விற்பதோ சட்டப்படி குற்றமாகும்.
About the author
Related Posts
July 13, 2021
வெள்ளைக்கடம்பு மரம்
October 6, 2021
ஊதா வால் தேவதை ஓசனிச் சிட்டு
October 11, 2021