சாம்பல் கதிர்க்குருவி

சாம்பல் கதிர்க்குருவி (ஆங்கில பெயர் : Ashy Prinia, Ashy Wren-Warbler), (உயிரியல் பெயர்: Prinia socialis) ஒரு சிறிய வகைப் பறவையாகும். இந்தியத் துணைக்கண்டத்தில் வாழும் இவை, இந்தியா, நேபாளம், வங்காளதேசம், பூட்டான், இலங்கை, மேற்கு பர்மா ஆகிய நாடுகளில் காணப்படுகின்றன. நகர்புற தோட்டங்களில் வாழும் இவற்றை, இதனுடைய சிறிய அளவு, வேறுபாடான நிறம், செங்குத்தான வால் என்பனவற்றைக் கொண்டு எளிதில் இனங்காணலாம். தென் பகுதி பறவைகள் பின்புறத்தே சிவப்பு கலந்த பழுப்பு நிறத்தைக் கொண்டு காணப்படும்.


விவரம்


13-41 செ.மீ. நீளமுடைய இப்பறவை குறுகிய வட்ட வடிவ சிறகினையும் கருப்பு புள்ளிகள் கொண்ட மஞ்சள்-வெள்ளை நிற நீண்ட வாலையும் உடையது. பொதுவாக வால் மேல் நோக்கியவாறு நேராக இருக்கும். இவற்றின் அலகுகள் சிறியதும் கருப்பு நிறமுடையதுமாகும். தலையின் மேற்பகுதி சாம்பல் நிறமும், பின்புறம் சிவப்பு கலந்த பழுப்பாக காணப்படும்.


பரவலும், உறைவிடமும்


இவை உலர்ந்த பரந்த மேய்ச்சல் நிலங்களிலும், திறந்த கானகங்களிலும், குறுங்காடுகளிலும், நகர்ப்புற தோட்டங்களிலும் காணப்படும். இந்தியாவிலுள்ள உலர் பாலைவனங்களில் இவை காணப்படுவதில்லை. இலங்கையில் தாழ் பிரதேசங்களில் காணப்படும். இவை 1600 மீ மலைப் பிரதேசங்களிலும் காணப்படும்.


பழக்கமுறையும் சூழலியலும்


இது ஒரு பூச்சிகளை உண்டு வாழும் பறவையாகும். இது இரு வகையான ஒலியை எழுப்பக் கூடியது. வேகமாகப் பறக்கும்போது இதன் இறக்கைகள் ஒருவித ஒலியை எழுப்பும். இவற்றின் கூடுகள் நிலத்தை அண்மித்ததாக குறுங்காடுகளில் அல்லது நீண்ட புற்களில் காணப்படும். இவை 3 முதல் 5 முட்டைகளை இடும்.


படங்கள்


வெளி இணைப்புகள்

சாம்பல் கதிர்க்குருவி – விக்கிப்பீடியா

Ashy prinia – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published.