சாம்பல் தகைவிலான் (Ashy Woodswallow, Artamus fuscus) என்பது தெற்கு ஆசியாவில் காணப்படும் தகைவிலான் வகை பறவையாகும். ஏனைய தகைவிலான் பறவைகள் போன்று இது குறுகிய வளைந்த அலகினையும், சிறிய, சதுரமான வாலையும் நீண்ட சிறகினையும் கொண்டது. இது கம்பிகள், உயர் மின்கம்பிகள், உயரமான பட்டுப்போன மரங்கள், அல்லது உயரமான பனை வகை மரங்களில் கூட்டமான காணப்படும்.
பரவல்
இந்தியத் துணைக்கண்டத்தின் பெரும்பகுதி (வடமேற்குப் பகுதி நீங்கலாக), தெற்கே இலங்கை வரை; கிழக்கே மியன்மார், தென்/தென்கிழக்கு சீனா (ஹைனான் உட்பட) வரை; தாய்லாந்து, இந்தோசீனா வரையிலுள்ள பகுதிகள்.
வாழ்விடம்
மரங்களடர்ந்த. திறந்த வெளிகள், குறிப்பாகப் பனை மரங்களுள்ள வெளிகள்; வேளாண்மை செய்யும் பகுதிகள்; 2100 மீட்டர் வரை காணப்படும்.
இனப்பெருக்கம்
இனப்பெருக்கக் காலம்: மார்ச்சு முதல் சூலை வரை;
கூடு: சல்லிவேர்கள், நார்ப்பொருள்களால் ஆன ஆழம் அதிகமில்லாத கிண்ணம். பனையின் நடுமரத்திலிருந்து மட்டை பிரியும் இடத்தில், தரையிலிருந்து ஏறக்குறைய 12 மீ உயரம் வரையில், கூடு கட்டும். உயர் மின்னழுத்தக் கோபுரங்களிலும் கூடு வைக்கும். ஓர் ஈட்டில் 2 முதல் 2 முட்டைகள் வரை இடும்.