கரும்பிடரி மாங்குயில்

கரும்பிடரி மாங்குயில் (ஒலிப்பு (உதவி·தகவல்)) (black-naped oriole, Oriolus chinensis) என்பது ஆசியாவின் பல பகுதிகளில் காணப்படக்கூடிய ஒரு பறவை ஆகும். இப்றவை மாங்குயில் போல அல்லாமல் அதன் கண் பகுதியில் இருந்து ஒரு கரும்பட்டை அதன் பிடரிவரை நீண்டு இணைகிறது. பெண் மற்றும் ஆண் பறவைகளுக்கு பெரிய அளவு வேறுபாடு இல்லை என்றாலும் பெண் பறவையின் இறக்கையில் உள்ள சிறகுகளில் பச்சை நிறம் கலந்ததாக இருக்கும். இப்பறவையின் அலகு இளஞ்சிவப்பு நிறம் கொண்டதாக இருக்கும்.


தோற்றம்


இவை மாங்குயில் போன்ற தோற்றம் கொண்டிருந்தாலும், உருவத்தில் சற்று பெரியது. கருமை நிற பிடரியானது கண்ணிலிருந்து நீண்டு கழுத்தின் பின்பகுதியில் இணைந்து காணப்படும். கரும்பிடரி மாங்குயில்கள் சிறு பழங்கள் மற்றும் பூச்சிகளை உண்ணும். நவம்பர் முதல் மார்ச் வரையிலான காலத்தில் தென் இந்தியப் பகுதிக்கு இப் பறவைகள் வலசை வருகின்றன. வலசை காலத்தில் கூடுகட்டி குஞ்சு பொரிப்பதில்லை.


வெளி இணைப்புகள்

கரும்பிடரி மாங்குயில் – விக்கிப்பீடியா

Black-naped oriole – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published.