பச்சைக் குருவி (blue-winged leafbird) என்பது ஒருவகைப் பறவையாகும். இப்பறவை பொதுவாக காடுகளில் காணப்படுகிறது. இப்பறவை வடகிழக்கு இந்தியாவில் இருந்து தென்கிழக்காசியாவின் ஜாவா வரை காணப்படுகிறது.
விளக்கம்
இப்பறவையின் உடல் பச்சை நிறத்திலும், கன்னம், கழுத்து ஆகியவை கறுப்பாகவும், அலகுகள் மெல்லியதாகவும், கூர்மையாகவும் உள்வளைந்து கறுப்பாகவும் இருக்கும். இவை பொதுவாக இணை இணையாகவோ அல்லது கூட்டம் கூட்டமாகவோ இரை தேடும். இவற்றின் நிறம் மரத்தின் இலைகளுடன் ஒன்றிவிடுவதால் இவற்றைக் காண்பது சிரமம்.