பழுப்புக் கீச்சான்

பழுப்புக் கீச்சான் (ஆங்கிலப் பெயர்: brown shrike, உயிரியல் பெயர்: Lanius cristatus) என்பது ஒரு வகைக் கீச்சான் குடும்பப் பறவை ஆகும். ஆண் பறவை 27-34 கிராமும், பெண் பறவை 28-37 கிராமும் இருக்கும்.


மற்ற கீச்சான் பறவைகளைப் போலவே இதன் கண்களின் மேல் ஒரு கருப்புக் கோடு போடப்பட்டதைப்போல் உள்ளது. இதன் காரணமாக முகமூடி அணிந்ததைப்போல் உள்ளது. இந்த முகமூடி போன்ற கருப்பு நிறம் பளபளப்பாக இருக்கும். இந்தக் கருப்பு நிறத்திற்கு மேல் வெள்ளை நிறப் புருவம் காணப்படுகிறது. இது பொதுவாகப் புதர்ப் பகுதிகளில் காணப்படும். முட்புதர்களின் மேல் தன் கால்களால் இருகப் பற்றியபடி இரையைத் தேடியவாறு உட்கார்ந்து இருக்கும். இவை ஏற்காட்டிற்கு வலசை வருகின்றன.


விளக்கம்


இதன் மேல்புறம் பழுப்பு நிறமாகக் காணப்படும். கருப்பு முகமூடியானது குளிர்காலத்தில் வெளிரிக் காணப்படும். தலை ஆண் பறவைக்கு அடர்ந்த பழுப்பு நிறத்திலும், பெண் பறவைக்கு சாம்பல் கலந்த பழுப்பு நிறத்திலும் காணப்படும். இதன் இறக்கைகள் பழுப்பு நிறத்தில் இருக்கும். இவற்றின் வாலில் சிறிய பிளவு காணப்படும்.


வெளி இணைப்புகள்

பழுப்புக் கீச்சான் – விக்கிப்பீடியா

Brown shrike – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *