பழுப்புத்தலை கடற்பறவை (brown-headed gull) சிறிய வகை கடற்பறவையான இது மத்திய ஆசியாவின் பீடபூமிப் பகுதிகளில் அமைந்துள்ள தஜிகிஸ்தான் பகுதியிலும் மங்கோலியா நாட்டின் உட்பகுதிகளிலும் அதிகமாக வாழுகிறது. இவை மழைக்காலங்களில் தென்கிழக்காசியாவின் பல பகுதிகளுக்கும் சென்று அங்குள்ள ஏரிகள், கடற்கறையின் ஓரப்பகுதிகளில் வாழுகிறது. லோரா இனத்தைச் சார்ந்த இவற்றில் பல பிரிவுகள் உள்ளன. இவை பொதுவாக ஏரிப்பகுதிகளில் அமைந்துள்ள சதுப்புநிலங்களில் நாணல் படுக்கையில் தான் இனப்பெருக்கம் செய்கிறது. குளிர் காலத்தின் மாலை நேரங்களில் உணவு தேடும்போது இரண்டும் கூடும் நிகழ்வு நடக்கிறது. இப்பறவை ஒரு கடல்பறவையாக இருந்தாலும் கடற்கரையோரங்களில் அரிதாகவே காணப்படுகிறது.
விளக்கம்
இப்பறவை முதிர்ச்சி அடைய இரண்டு வருடங்கள் எடுத்துக்கொள்கிறது. முதல் வருடம் கருப்பு நிற வாலுடனும், இறகுப்பகுதி அதிகப்படியான கருப்பு நிறம் கொண்டும் காணப்படுகிறது. இப்பறவைகள் அதிகமாக ஒலி எழுப்பும் குணம் கொண்டுள்ளது. இவை கருப்புத்தலை கடற்பறவையைவிட கொஞ்சம் பெரியதாக உள்ளது. கோடைகாலங்களில் இவற்றில் உள்ள ஆண் பறவையின் தலைப்பகுதி கொஞ்சம் கருப்பு நிறம் கொண்டதாகவும், உடல் பகுதி வெளிறிய சாம்பல் நிறத்திலும், மற்றும் அலகுப்பகுதியும்,கால் பகுதியும் சிவந்தும் காணப்படும். கருப்பு இறகுகளில் அதிகமான வெள்ளை நிறம் சேர்ந்து காணப்படுகிறது. இவற்றின் உடலின் அடிப்பாகம் சாம்பல் நிறத்துடனும் பறப்பதற்கு ஏதுவாகவும் அமைந்துள்ளது. இவற்றின் உடலில் காணப்படும் பழுப்பு சாம்பல் நிறம் குளிர்காலங்களில் குறையத்துவங்கி இருண்ட நிறங்களாக மாறுகிறது.
உணவு முறை
இவை பூச்சிகள், முதுகெலும்பில்லாத புழுக்கள் போன்றவற்றை நகர வீதிகளில் வெளிவரும் கழிவுகளிலிருந்தும், வயல்வெளிகளிலிருந்தும் உட்கொள்கிறது.