உண்ணிக்கொக்கு

உண்ணிக்கொக்கு மேய்ச்சல் புல்வெளிகளிலும் நெல்வயல்களிலும் உள்நாட்டு நீர்நிலைகளிலும் அதிகளவில் காணப்படும் ஒரு கொக்கு ஆகும். சிறு வெண் கொக்கை ஒத்த உடலமைப்பு கொண்டது இது; தடித்த, அளவில் சற்று சிறிய, மஞ்சள் நிற அலகும் இனப்பெருக்க காலங்களில் சிறகுத்தொகுதிகளில் ஏற்படும் நிற மாற்றங்களும் இதனை சிறு வெண்கொக்கிடமிருந்து வேறுபடுத்திக் காட்டுகின்றன.


மாட்டுக்கொக்கு, மாடு மேய்ச்சான்,மஞ்சள் கொக்கு ஆகியவை இதன் வேறு பெயர்கள்.


உணவு / உண்ணும் முறை


இது பெரும்பாலும் பூச்சிகளையே உண்ணும்; மாடுகளை அண்டிச்செல்லும் இவை மாடுகள் நடக்கும் போது கிளறிவிடப்படும் வெட்டுக்கிளிகள், தத்துக்கிளிகள் போன்றவை பறக்கும் போது கொத்தித் தின்னும்.


வெளி இணைப்புகள்

உண்ணிக்கொக்கு – விக்கிப்பீடியா

Cattle egret – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published.