சீர் பெசன்ட் (cheer pheasant) என்பது ஒரு பறவை ஆகும். இது சிலபகுதிகளில் வேட்டையாடப்படுவதால் இவற்றின் எண்ணிக்கை குறைந்துபோய் அழிவாய்ப்பு இனம் என்று செம்பட்டியலில் வகைப்படுத்தப்பட்டுள்ளது. இப்றவைகள் இந்தியா, பாக்கித்தான், நேபாளம் ஆகிய நாடுகளின் இமயமலைப் பகுதிகளில் காணப்படுகின்றது.
விளக்கம்
இந்த பறவைகள் நீண்டவாலோடு, குறிகிய கரும்பழுப்பு நிற பின்நோக்கி வளைந்த கொண்டையோடு இருக்கும். இதன் இறகுகள் மங்கிய மஞ்சள் சாம்பல் நிறத்தில் கறுப்புக் கோடுகளுடன் காணப்படும். பெண்பறவை உருவத்தில் ஆண்பறவையைவிட சிறியது. ஆனால் தோற்றத்தில் ஒன்று போலவே காணப்படும்.