அக்காக்குயில்

அக்காக்குயில் அல்லது அக்காக்குருவி (Common hawk-cuckoo)(Hierococcyx varius) என்று அறியப்படும் இப்பறவை இந்திய துணைக்கண்டத்தை வாழ்விடமாகக் கொண்டது. இது குயிலின் இனத்தைச்சேர்ந்த பறவையாகும். இப்பறவை தோற்றத்தில் வல்லூறு என்ற பறவைப்போல் இருக்கும். இவை காக்கை அல்லது தவிட்டு குருவி போன்ற பறவைகளின் கூட்டில் முட்டைகளை இடும்.


வாழ்வுமுறை


அக்காக்குயில் மனிதர்கள் வாழும் பகுதில் அமைந்துள்ள மரங்களில் வாழும். ஆனாலும் எளிதில் மனிதர்களின் கண்ணில் தென்படாது.


விளக்கம்


அக்காக்குயில் பொதுவாகப் பருந்தைவிட சிறியதாகவும் புறாவைப்போல் உருவத்தைக்கொண்ட குயிலினப் பறவை ஆகும். இப்பறவையின் தோகை நீறுபூத்த சாம்பல் நிறத்தில் காணப்படும் அதோடு கீழே வெள்ளை நிறமும், பழுப்பு நிறத்தில் சிறு சிறு கோடுகளும் கொண்டதாக காணப்படும். இதன் வால் பகுதி முடியும் இடத்தில் விரிந்து காணப்படும். ஆண், பெண் இரண்டுக்குமே வால் பகுதி ஒரே மாதரித்தான் காணப்படுகிறது. இப்பறவையில் கண்களைச்சுற்றி ஒரு தனித்துவமானபடி மஞ்சள் வளையம் காணப்படுகிறது. வயதுவந்த பறவைகளின் உடலில் இடவலமாக வல்லூறுக்கு உள்ளது போல் கோடுகள் காணப்படுகிறது.


இப்பறவை பார்ப்பதற்குப் பருந்து போல் இருந்தாலும் இது பருந்து இல்லை. ஆனால் இறக்கைகளை அசைக்கும் விதம் மற்றும் தனது இரையைப் பிடித்து லாவகமாகத் தடையின்றி நழுவிச்செல்லும் போக்கு, வாலை ஆட்டும் பாணி, மேலே எழும்பிச் செல்லும் விதம் மேலிருந்து கீழே இறங்குவது போன்ற செயல்களால் பருந்துபோல் (வைரிபோல்) தெரியும். இவை சிறிய பறவைகள், அணில்கள் போன்றவைகளைப் பார்த்தால் ஒலியெழுப்பும். இப்பறவைகளில் ஆண் பறவை பெண் பறவையைவிட பெரியதாக இருக்கும்.


இப்பறவையைப் பார்ப்பவர்கள் தொண்டை மற்றும் மார்பக இருண்ட கோடுகள் போன்றவற்றைக் கொண்டு பெரிய பருந்து-குயில் (Large Hawk-Cuckoo) என எண்ணுகிறார்கள். இந்த குழப்பத்திற்கு இன்னொரு காரணம் இதன் தாடையும், கன்னமும் பருந்து போல் இருக்கும்.


கோடை முடிந்து இப்பறவை இலையுதிர் காலங்களில் தனது இடத்தைத் தேர்வு செய்ய ஆரம்பிக்கிறது.


வெளி இணைப்புகள்

அக்காக்குயில் – விக்கிப்பீடியா

Common hawk-cuckoo – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published.