மாம்பழச்சிட்டு

மாம்பழச்சிட்டு (Common Iora – Aegithina tiphia) என்பது தெற்காசிய வெப்பமண்டலப் பகுதிகளில் காணப்படும் (மரங்களில்) அடையும் (passerine) பறவைகளுள் ஒன்றாகும்; இதற்கு மஞ்சள் சிட்டு என்றொரு பெயரும் உண்டு.


அளவும் இயல்புகளும்


மாம்பழச்சிட்டின் கூப்பாடு (உதவி·தகவல்) இது ஊர்க்குருவியிலும் சற்று சிறிதாய்க் கீழ்ப்பக்கம் பசுமஞ்சளாய் இருக்கும் ( 14 செமீ [] ). ஆண், பெண் இரண்டுமே இனப்பெருக்கமல்லா காலத்தில் பசுமை கலந்த மஞ்சள் நிறவுடலும் இறக்கைகளில் வெண்பட்டைகளும் கொண்டிருக்கும்; ஆனால் பெண் சிட்டின் மேல்பாகம் பசுமையாக இருக்கும், ஆணின் இறக்கைப்பகுதி கருமை அதிகமாயிருக்கும்; இனப்பெருக்க காலத்தில் ஆணின் முதுகும் தலையும் வாலும் கருத்திருக்கும்; மஞ்சள் நிறம் தூக்கலாகத் தெரியும். குளிர்காலத்தில் ஆண் சிட்டு தன் கருமையை இழந்து பேடையைப் போல் பசுமை போர்த்திருக்கும். மர நெருக்கமுள்ள இடங்கள், தோட்டங்கள், சிறு காடுகளில் இவை இணையுடன் வாழும்.


பரவல்


வெளி இணைப்புகள்

மாம்பழச்சிட்டு – விக்கிப்பீடியா

Common iora – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published.