மலை மைனா (ஆங்கில பெயர் : Common hill myna) (அறிவியல் பெயர் : Gracula religiosa) என்ற இந்த பறவையானது பொதுவாக மைனா என்ற குடும்பத்தைச் (Starling) சார்ந்தது இனம் ஆகும். இப்பறவை தோற்றத்தில் சாதாரண மைனாவிலிருந்து வேறுபடுகிறது. இப்பறவை தெற்காசியாவையும், தென்கிழக்காசியாவின் மலைப்பகுதியையும் பூர்வீகமாகக் கொண்டது. இவற்றில் இலங்கை மலைமைனா இதன் துணை இனமாக கருதப்படுகிறது. இலங்கை மலை மைனா, ஜி religiosa முன்னாள் துணை இனமாகும் இப்போது பொதுவாக ஒரு தனி இனங்கள் ஜி ptilogenys ஏற்றுக்கொள்ளப்படுகிறது. மேலும் இவற்றில் என்கோனொ தேவுகளிலும், (Enggano hill myna), நியாஸ் மலை மைனாவும் (Nias hill myna) இக்குடும்பத்தில் சேரும். இந்தியாவில் நீலகிரி மலைக்காடுகளில் தென் மலை மானா (Southern hill myna) என்ற இனமும் இதிலிருந்து வேறுபட்டுக் காணப்படுகிறது. இது சத்தீசுகர் மாநிலப்பறவையாகும்.
விளக்கம்
இதன் தலைப்பகுதிக்கும் கேழே கழுத்துப்பகுதி சற்று சதைப்பிடிப்புடன், ஆரஞ்சு-மஞ்சள் திட்டுக்களுடன் சாதாரன மைனாவை விட வேறுபட்டுக் காணப்படுகிறது. 29 செமீ நீளம் கொண்டு சாதாரண மைனாவை விட உருவத்தில் பெரியதாகக் காணப்படுகிறது.
இதன் தோகை உடல் முழுவதும் பளபளப்பான கரும் பச்சை நிறத்தில் காணப்படுகிறது. தலை மற்றும் கழுத்திலும் ஊதா நிறம் கொண்டு தோற்றமளிக்கிறது. இதன் ரெக்கைகள் இரண்டும் வெள்ளை நிறத்தில் பெரியதாக இருக்கும் ஆனால் அமர்ந்திருக்கும் போது மூடப்பட்டு இருக்கும். இதன் அலகுப்பகுதியும், கால் பகுதியும் உருதியாக உள்ளது. அதன் பிடரியிலும், கண்ணின் கீழ் பகுதியிலும் மஞ்சள் நிறம் உள்ளது. பொது மைனாவிலிருந்தும், ஏரி மைனாவிலிருந்தும் இதன் கண் ஓர வட்டம் வேறுபட்டிருக்கும். இவற்றில் ஆண் பெண் இரண்டுமே ஒரே மாதறியாகக் காணப்படுகிறது. இவற்றில் ஆண் பெண் மைனாக்களின் குரலால் வித்தியாடப்படுகிறது.
இவற்றில் ஏழு முதல் எட்டு கிளை இனங்கள் காணப்படுகின்றன. அவை:
பரவல் மற்றும் உயிர் சூழலியல்
இந்த மைனா இந்தியாவில் உத்தரகாண்ட் மாநிலத்தில் அமைந்துள்ள குமாயன் பிரிவு (80 ° கி தீர்க்கரேகை முதல் கிழக்கு பகுதிகளில் அமைந்துள்ள நேபாளம், சிக்கிம், பூடான் மற்றும் அருணாசலப் பிரதேசம், மற்றும் இமயமலையின் அடிவாரத்தில் உள்ள சில பகுதிகளில் காணப்படுகிறது. மேலும் பிலிப்பைன்ஸ், வடக்கு இந்தோனேசியா, தெற்கு சீனா, மற்றும் தாய்லாந்து போன்ற நாடுகளிலும் பரவியுள்ளது. இவை மரத்தின் பொந்துகளில் மூன்று அல்லது நான்கு முட்டைகளிட்டி குஞ்சு பொரிக்கிறது.
செல்லப்பிராணி வர்த்தகம் மற்றும் பாதுகாப்பு
இப்பறவையின் குரல் ஒலிக்காகவும் இதன் தோற்றத்திற்காகவும் செல்லபிராணியாக வீடுகளில் வளர்க்கப்படுகிறது. இப்பறவை அறிதானதாக இருப்பதால் குஞ்சுபொரித்தவுடன் நேரடியாக வீடுகளில் கொள்முதல் செய்யப்பட்டு வர்த்தகம் நடக்கிறது. இதன் காரணமாக பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் செம்பட்டியலில் பாதுகாக வேண்டிய இனம் என்ற இடத்தில் வைத்துள்ளது. ஆனாலும் 1990 ஆம் ஆண்டு மட்டும் 20,000 பெரிய , மற்றும் சிறிய பறவைகளை வர்த்தக்கத்திற்கு பயன்படுத்தியுள்ளது தெரியவந்துள்ளது.