கூம்பலகன் அல்லது சாதா கூம்பலகுச் சில்லை (common rosefinch) என்பது ஆசியாவிலும், ஐரோப்பாவிலும் வாழக்கூடிய ஒரு பறவையாகும். பொதுவாக இப்பறவை மழைக் காலத்தில் இந்தியாவுக்கு வலசை வரக்கூடியது. சிறு கூட்டமாக திரியக்கூடியது.
பெயர்கள்
தமிழில் :கூம்பலகன்
ஆங்கிலப்பெயர் :Common Rosefinch
அறிவியல் பெயர் :Carpodacus erythrinus
விளக்கம்
15 செ.மீ. அளவு உடைய, இப்பறவைகளில் ஆண்பறவை அழகான ரோசா நிறத்தில் தலை, நெஞ்சு, முதுகு, தோள் ஆகியவை கொண்டிருக்கும். பெண்பறவை பசுமை கலந்த தவிட்டு நிறம் கொண்டது. இரு பாலினத்திற்கும் அலகு ஒன்று போல இருக்கும். வால் பிளவு பட்டிருக்கும்.
உணவு
பயிர்களின் தானியங்களை கொத்தித் தின்னும். அரசு, ஆல், உன்னி போன்றவற்றின் பழங்களையும் முள் முருங்கை போன்ற சில பூக்களின் தேனையும் உண்ணும்.டிவீஇ. டிவீஇ டிவீஇயு என்றோ டி.டி.யூ எனவோ குரல் கொடுக்கும்.