தால்மேசிய கூழைக்கடா

தால்மேசியக் கூழைக்கடா என்பது கூழைக்கடாக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பறவை. இது தென்கிழக்கு ஐரோப்பாவில் இருந்து இந்தியா, சீனா வரையுள்ள ஆழம் குறைந்த ஏரிகளிலும் நீர்நிலைகளிலும் இனப்பெருக்கம் செய்கிறது. தாவரங்களின் குவியலில் இவை கூடு கட்டுகின்றன.


கூழைக்கடாக்களில் இவையே மிகவும் பெரியன. சராசரியாக 160–180 செ.மீ (63-70 அங்குலம்) நீளமும், 11–15 கிலோகிராம் (24-33 பவுண்டு) எடையும் இருக்கும். இவை இறக்கைகள் விரித்த நிலையில் 3 மீட்டருக்கும் (10 அடி) மேலாக இருக்கும். 11 கிலோவுக்கும் மேல் எடையுள்ள இப்பறவைகளே உலகின் மிகப்பெரிய பறக்கும் திறனுள்ள பறவைகளாகும். இனப்பெருக்க காலத்தில் இவற்றின் கீழ் அலகு சிவப்பு நிறத்தில் காணப்படும். இளம் பறவைகள் சாம்பல் நிறத்தில் இருக்கும்.


இப்பறவை சிறுதொலைவுக்கே வலசை போகிறது. மீன்களே இவற்றின் முதன்மையான உணவு. மீனைத் தவிர சிறு நீர்வாழ் உயிரிகளையும் உணவாகக் கொள்ளும்.


வாழிட அழிப்பினால் இவற்றின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து விட்டது. 1994-ஆம் ஆண்டுக் கணிப்பின் படி ஐரோப்பாவில் ஏறத்தாழ 1000 இணைகள் உள்ளன. இவற்றில் பெரும்பாலானவை உக்ரைன், உருசியா, கிரேக்கம், வடக்கு மக்கெதோனியா, உரோமானியா, பல்கேரியா, அல்பேனியா முதலிய நாடுகளில் காணப்படுகின்றன.


வெளி இணைப்புகள்

தால்மேசிய கூழைக்கடா – விக்கிப்பீடியா

Dalmatian pelican – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published.