மாங்குயில்

மாங்குயில் (இலங்கை வழக்கு: மாம்பழத்தி) உடலில் மஞ்சள் நிறமும் இறக்கையில் கறுப்பு நிறமும் கொண்ட பறவை. இதன் அறிவியல் பெயர் ஓரியோலசு ஓரியோலசு (Oriolus oriolus). கண்ணருகேயும் கறுப்புத் திட்டுகள் இருக்கும். ஏறாத்தாழ 22-25 செமீ (9-10 அங்குலம்) நீளமுடைது. வீட்டுக் குருவியை விடப் பெரியது. சற்றேறக்குறைய மைனா அளவினது. இது மாமரத்தில் காணப்படுவதாலும், மாம்பழம் போல் மஞ்சளால் இருப்பதாலும் மாங்குயில் எனப்படுகின்றது. இதன் குரல் (குயிலும் பாட்டு) இனிமையாக இருக்கும் (மாங்குயில் கூவுவதைக் கேட்க). மாங்குயில் முட்டைகள் வெளிரிய இளம் பழுப்பு நிறத்தில் கரும்புள்ளிகளுடன் இருக்கும். கூட்டில் 3-4 முட்டைகள் இருக்கும். இதன் குஞ்சுகள் இளம்பச்சை நிறத்தில் இருக்கும். குஞ்சுகளின் தொண்டை,, நெஞ்சுப்பகுதிகளும் அடிப்பகுதிகளும் வெள்ளை நிறத்தில் இருக்கும் அடர்ந்த நிறத்தில் கோடு கோடாக இருக்கும்.


தலையில் கறுப்பாக உள்ள மாங்குயில் வேறு இனம், அதன் பெயர் கருந்தலை மாங்குயில் (அறிவியல் பெயர் ஓரியோலசு காந்தோமசு Oriolus xanthomus). ஓரியோலசுக் குடும்பத்தைச் சேர்ந்த இவை தவிர மாங்குயில் போலவே தோற்றம் அளிக்கும் அமெரிக்க மஞ்சக்குயில்களும் ஆங்கிலத்தில் ஓரியோல் (Oriole) என்னும் அதே பெயரால் அழைக்கப்பட்டாலும் அவை முற்றிலும் வேறு பறவைக் குடும்பத்தைச் சேர்ந்தவை. அமெரிக்க மஞ்சக்குயில்கள் அறிவியல் வகைப்பாட்டின்படி இக்டேரசு (Icterus) என்னும் குடும்பத்தைச் சேர்ந்தவை.


வெளி இணைப்புகள்

மாங்குயில் – விக்கிப்பீடியா

Eurasian golden oriole – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *