கொடிக்கால் வாலாட்டி

இது வாலாட்டிகளில் Motacillidae குடும்பத்தை சார்ந்த வாலாட்டியாகும்,இது குறிப்பாக காடுகளில் காணப்படும் வளரியல்பு உடையவை ஆகும். இதன் இனப்பெருக்கமானது கிழக்கு ஆசியா,இந்தியா இந்தோனிசியாவில் செய்கிறது.


பெயர்கள்


தமிழில் :கொடிக்கால் வாலாட்டி


ஆங்கிலப்பெயர் :Forest Wagtail


அறிவியல் பெயர் :Dendronanthus indicus


உடலமைப்பு


17 செ.மீ. – உடலின் மேற்பகுதி ஆலிவ் பழுப்பு. கீழ்ப்பகுதி வெளிர் மஞ்சள் தோய்ந்த வெண்மை நிறம். தொண்டையின் கீழ்ப்பகுதியில் காணப்படும் பிறை வடிவிலான இரண்டு கருப்புத் திட்டுகளையும் இறக்கைகளில் காணப்படும் இரண்டு வெண்பட்டைகளையும் கொண்டு அடையாளம் காணலாம்.


காணப்படும் பகுதிகள் ,உணவு


மேற்குத் தமிழ்நாட்டின் மலைப்பகுதிகளுக்கு வலசை வரும் இது ஏப்ரல் வரை தங்குகின்றது. தனித்தும், சிறு குழுவாகவும், காடுகளில் ஓடும் சிற்றாறுகளை அடுத்தும் காட்டிடையே புழு பூச்சிகளைப் பிடிக்கும். மற்ற வாலாட்டிகளைப் போல வாலை மேலும் கீழுமாக ஆட்டுவதோடு வாலோடு கூட உடம்பையும் பக்கவாட்டில் அசைக்கும் பழக்கம் உடையது. எறும்பு முதலிய புழு பூச்சிகளே இதன் முக்கிய உணவு. இரவில் நாணல்புதர்களிடையேயும் கரும்புக் காடுகளிலும் மற்ற வாலாட்டிகளோடு சேர்ந்து தங்கும்.


வெளி இணைப்புகள்

கொடிக்கால் வாலாட்டி – விக்கிப்பீடியா

Forest wagtail – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published.