சாம்பற் சிட்டு அல்லது பட்டாணிக் குருவி ( great tit) (Parus major) என்பது வெள்ளைச்சிட்டு வகையைச் சேர்ந்த ஒரு பறவையாகும். இப்பறவை ஐரோப்பா, மத்தியகிழக்கு, மைய மற்றும் வட ஆசியா, வட ஆப்ரிக்காவின் சில பகுதிகள் ஆகிய இடங்களில் காணப்படுகிறது.
விளக்கம்
இப்பறவை சிட்டுக்குருவி அளவே இருக்கும். இவை வெகு சுறுசுறுப்பாக காணப்படும். இதன் அலகுகள் குருவியின் அலகைப்போல குட்டையாக காணப்படும். தலையுச்சி ஒளிரும் கறுப்பு நிறத்தில் இருக்கும். கன்னம் மற்றும் வயிற்றுப் பகுதியில் வெள்ளையாக இருக்கும். முதுகு சாம்பல் நிறத்திலும்,