பசுஞ் சொண்டுப் பூங்குயில் (Phaenicophaeus tristis) என்பது இந்தியாவிலும் தென்கிழக்காசியாவிலும் காணப்படும் குயிலினப் பறவையாகும். இப்பறவைகள் மங்கிய ஒளிர் நீலக் கறுப்பானவையாகவும் நுனிப் பகுதியில் வெண்ணிற இறகுகளுடன் கூடிய நீண்ட வாலைக் கொண்டனவாகவும் காணப்படும். இதன் சொண்டு கூர்மையாயும் வளைந்தும் இருக்கும். பசுஞ் சொண்டுப் பூங்குயில்கள் உலர் புதர்களிலும் அடர்த்தி குறைந்த காடுகளிலும் காணப்படும்.
இந்தியாவின் மேற்கு வங்காளத்தில் ஜலபைகுரி மாவட்டத்தில் புக்சா புலிகள் ஒதுக்ககத்தில் உள்ள பசுஞ் சொண்டுப் பூங்குயில்.
வெளி இணைப்புகள்
பசுஞ் சொண்டுப் பூங்குயில் – விக்கிப்பீடியா