கௌதாரி

கவுதாரி அல்லது கௌதாரி (Grey Francolin) எனப்படுபவை தெற்காசியாவில் வயல்வெளிகளிலும் புதர் மண்டிய இடங்களிலும் காணப்படும் பறவையினம். தவிட்டு நிற உடலில் கரு நிறக் கோடுகளை உடைய கோழியைப் போன்ற ஒரு வகைப் பறவை இது. இத்தகைய இடங்களில் இப்பறவைகள் காலையிலும் மாலையிலும் க-டீ-டர் … டீ-டர் என்ற கூப்பாடுடன் உரக்கக் கூவுவதைக் கேட்க முடியும். இவை இறைச்சிக்காக வேட்டையாடப்படும்.


இனப்பெருக்க காலத்தில் ஆண் கவுதாரியின் இக்கூப்பாடு பிற ஆண்களையும் அழைக்கவல்லதால், அவற்றைப் பிடிக்க உதவும் கவர்பொருளாகவும் இது பயன்படுத்தப்படும்.


அடையாளங்கள்


வெள்ளை கறுப்புப் பட்டைகளுடன் காப்பி நிறப் பொட்டுகள் கூடிய முதுகினையும் மெல்லிய கருநூற்கோடுகளிட்ட பழுப்பு மார்பும் சிவந்த மார்பும் கொண்டிருக்கும். இவை புறாவை விடவும் சிறிது பருத்துக் காணப்படுகின்றன.


உணவு


வயற்காடுகளில் தானியங்களைப் பொறுக்கியும் கறையான்களையும் வண்டுகளையும் உண்ணும்.


இயல்பு


வேகமாகப் பறக்கவியலும் என்றாலும் பெரும்பாலும் பூமியிலேயே ஓடியாடும். அபாயம் ஏற்பட்டாலும் ஓடி ஒளிந்தே தப்ப முயலும். வேறு வழியில்லை என்றால் மட்டுமே பறக்கும்.


இப்பறவைகள் வாழும் இடங்களில் தரையில் தானியத்தினைத் தூவி வலை விரித்து வைத்து நரிக்குறவர்கள் அவற்றைப் பெருமளவில் பிடித்து சந்தைகளில் விற்பார்கள். வனவிலங்குப் பாதுகாப்புச் சட்டம் வந்த பின் இவற்றின் வியாபாரம் அவ்வளவு வெளிப்படையாக நடைபெறுவதில்லை. இவற்றின் மாமிசத்திற்காகவே இவை பிடிக்கப் படுகின்றன. இந்தப் பறவைகள் மனிதர்களைக் கண்டால் பயத்தில் ஓடி ஒளிந்திடும். பறக்கும் போது அதிக உயரத்தில் பறக்காது. இவை பறக்கும்போது புறாக்களைப் போன்றே பட படவென இறக்கைகள் அடிப்பதின் சத்தம் கேட்கும்.{{citation needed}}


அழிவு நிலை


பூச்சிக்கொல்லிகளாலும், உணவுக்காவும் இப்பறவைகள் வெகுவாக அழிக்கப்பட்டு வருகிறது. கடந்த 20 ஆண்டுகளாக நடத்தப்பட்ட ஆய்வில் 20 சதவீதம் பறவைகள் அழிந்துவிட்டன. தற்போது இவை 10,000 எண்ணிக்கையில் தான் வாழுகின்றன. இவற்றில் ஆண்டுக்கு 10 சதவிதம் அழிக்கப்பட்டு வருகிறது.


வெளி இணைப்புகள்

கௌதாரி – விக்கிப்பீடியா

Grey francolin – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *