சாம்பல் நிற வாத்து (Greylag goose) எனும் இப்பறவை அனாடிட் (Anatidae) என்ற குடும்பத்தைச் சார்ந்த வாத்து ஆகும். இதன் தோகை சாம்பல் மற்றும் வெள்ளை நிறத்திலும், பாதம் தட்டையாகவும், இதன் அலகு ஆரஞ்சு நிறத்திலும் காணப்படுகிறது. பொதுவாக முதிர்ச்சியடைந்த பறவையின் எடை 3.3 கிலோகிராம் வரை இருக்கும். இவை குளிர்காலத்தைக் கழிக்க வடக்கே ஐரோப்பா பகுதியிலிருந்து தெற்கு நோக்கி பறந்து வருகிறது.
விளக்கம்
இப்பறவை அதிக எடைகொண்டதாக உள்ளதால் சற்று தொலைவு தாழப்பறந்து பின்னரே மேலே எழும்பிப்பறக்கும் பழக்கம் கொண்டுள்ளது. இதன் பாதங்கள் தண்ணீரில் நீந்துவதற்கு தோதாக தட்டையாக உள்ளது. இவற்றின் இனப்பெருக்கம் கோடைக்காலத்தில் நடந்து முட்டை இட்டபின் இவற்றின் இறகுகள் உதிந்து மீண்டும் முளைக்க ஒரு மாத காலங்கள் எடுத்துக்கொள்கின்றன. இவை வலசைபோவதற்கு தேவையான ஆற்றலை சேமிப்பதற்காக சாப்பிட்டுக்கொண்டே இருக்கும் பழக்கத்தைக்கொண்டுள்ளது. இவை பெருங்கூட்டமாக வசித்தாலும் இறகுகள் உதிர்ந்திருக்கும் காலங்களில் அதிக அளவு வேட்டையாகப்படுகின்றன.
வெளி இணைப்புகள்
சாம்பல் நிற வாத்து – விக்கிப்பீடியா