புள்ளி மூக்கு வாத்து (spot-billed duck) அல்லது புள்ளி மூக்கன், நீரின் மேற்பரப்பில் உணவருந்தும் சில வாத்து வகைகளுள் ஒன்றாகும். அலகின் (அலகின்) நுனியில் ஒரு மஞ்சள் நிறப்புள்ளி உள்ளது இவைகளின் தனிச்சிறப்பு.
உருவமைப்பு
உடலளவுகள்
புள்ளி மூக்கு வாத்து மல்லார்ட் (Mallard) எனப்படும் பச்சை கழுத்து வாத்தின் அளவே உள்ளன. இவை மனிதரிடம் இருக்கும் வாத்துகளின் அளவையும் ஒத்துள்ளன. இவ்வினம் 55-63 செ.மீ. நீளமும், 83-95 செ.மீ. அகல இறக்கையும், 790-1,500 கிராம் எடையும் கொண்டிருக்கின்றன.
நிறங்களின் கலவை
இவை பொதுவாக பழுப்பு நிறமுடைய வாத்துக்கள். இவற்றின் தலையும் முகமும் சற்றே வெளுத்திருக்க, இதன் அலகு கருத்தும் நுனியில் பிரகாசமான மஞ்சள் நிறமும் கொண்டுள்ளது. சிறகுகள் வெள்ளை நிறமும், கருத்த பறக்கும் இறகுகளும் இருக்க, மேலிருந்து பார்க்கையில் வெள்ளை நிறம் சூழப்பட்ட பச்சை வண்ண இறகுகள் உள்ளன. ஆண் பறவைகள் அலகும் முகமும் இணையும் இடத்தில் ஒரு பெரிய சிவப்பு நிற அடையாளம் உள்ளது. பெண்களும் ஆணைப்போல் இருப்பினும் சற்றே பளிச்சிடும் தன்மை குறைந்து இருக்கின்றன. இளம் பறவைகளும் குஞ்சுகளும் உடல்முழுதும் இளஞ்சிவப்பு நிறம் கொண்டுள்ளன. கிழக்கு புள்ளி-மூக்கு வாத்து சிறிது கருமையான வண்ணமும் இளஞ்சிவப்பு நிறமும் கொண்டிருக்க பசிஃபிக் கருப்பு வாத்து போன்றும் இருக்கும். இவை அலகில் சிவப்பு புள்ளி இருக்காது, மற்றும் பச்சைக்கு பதில் நீல வண்ண மேல் இறகுகள் கொண்டிருக்கின்றன.
ஒலி
ஆண், பெண் இருபாலரும் ஒரே வகையான ஒலியை எழுப்புகின்றன.
குணாதிசியங்கள்
பொதுவாக திறந்த வெளி நன்னீர் ஏரிகள் மற்றும் சதுப்பு நிலங்களில் நீருக்கு அடியில் சென்று உணவு தேடாது. நீரின் மேற்புறத்திலேயே இருக்கும் பாசி, சின்னச் சின்னத் தாவரங்கள் போன்றவையே இவற்றின் உணவு. வட இந்தியாவில் சூலை முதல் செப்டம்பர் வரையிலும், தென் இந்தியாவில் நவம்பர் முதல் திசம்பர் வரையிலும் இந்தப் பறவைகள் இனப்பெருக்கம் செய்யும். இந்தியா முழுக்க நீர்நிலைகளில், எல்லாப் பருவ காலத்திலும் காணப்படும் பறவையான இது, வலசை செல்லும் பறவை கிடையாது. எப்போதும் ஆண், பெண் பறவைகள் இணையாக இணைந்துதான் இரை தேடும். காலை, மாலை வேளையில்தான் இவை இரைதேடும். மதிய நேரத்தில், கண்ணை மூடி, தண்ணீரிலேயே தூங்கும் வழக்கம் கொண்டது.
துணை இனங்கள்
பரம்பல்
மித வெப்ப மற்றும் கிழக்கு ஆசியாவில் பரவலாகக்காணப்படும் இவ்வாத்துக்களின் துணை இனங்களுக்கேற்ப காணப்படுகின்றன. இவை தெற்கு பகுதிகளில் இந்தியா மற்றும் பாகிஸ்தானிலும் ஜப்பானில் தெற்கு வரையிலும் வாழ்கின்றன. எனினும் இதன் வடக்கு பிராந்தீய துணை இனமான கிழக்கு புள்ளி-மூக்கு வாத்து வலசை வரக்கூடியதாகையால் இவை குளிர்காலத்தை தென்கிழக்கு ஆசியாவில் கழிக்கின்றன. இவை இனவிருத்தி காலங்கள் தவிர ஏனைய நேரங்களில் சிறு கூட்டங்களாக வாழ விழைகின்றன. புவியின் தட்பவெப்ப மாற்றத்தின் காரணமாக (உலக வெப்பமாதலால்) வடக்கில் வாழும் கூட்டங்கள் 500 கி.மீ. வடக்கே தன் எல்லைகளை அதிகரித்துள்ளன.
உணவு
நீரின் மேற்பரப்பில் உள்ள பாசிகள் மற்றும் பயிர் வகைகளை உண்ணும் இவை, சிறிது தலையை மூழ்கியும் சாப்பிடும். பெரும்பாலும் இவை குளுமையான காலை மற்றும் மாலை வேளைகளில் உணவுண்டு, பின் தகிக்கும் பகலில்
இனவிருத்தி
கூடு
கூடு பொதுவாக நீரின் அருகாமையில் உள்ள புல்தரையில் அமைக்கின்றன.
முட்டை
ஒவ்வொரு பெண் பறவையும் 8-14 முட்டைகள் வரை இடும்.
வேட்டையாடிகள்
பருந்துகளும் கழுகுகளும் சில வகை பாலூட்டிகளும் சிறு குஞ்சுகளை வேட்டையாடினாலும், இவை சற்று வளர்ந்த பின்னர் இவைகட்கு எதிரிகள் அவ்வளவாக இல்லை எனலாம்.