பனங்காடை

பனங்காடை (Coracias benghalensis) என்பது ஆசியக் கண்டத்தின் தெற்குப்பகுதியில் காணப்படும் ஒரு பறவை. இப்பறவை பாலக்குருவி என்றும் அழைக்கப்படும். இது ஈராக் முதல் தாய்லாந்து வரை காணப்படுகிறது. இப்பறவை நீலமும் பழுப்பும் கலந்த நிறத்தில் இருக்கும். திறந்த புல்வெளிகளிலும் காட்டுப்பகுதிகளிலும் பொதுவாகக் காணப்படும். ஆண், பெண் பறவைகளுக்கிடையே தோற்றத்தில் குறிப்பிடத்தக்க வேறுபாடு இல்லை. கொண்டை, வால், இறக்கைப் பகுதிகள் நீலநிறத்திலும் கழுத்து உடலின் அடிப்பகுதி பழுப்பு நிறத்திலும் இருக்கும்.


உலகளவில் இந்தியாவிலேயே இவை மிகுந்துள்ளன. சாலையோர மரங்களிலும் மின்கம்பிகள் முதலானவற்றிலும் இவற்றை அமர்ந்திருக்கக் காணலாம்.


வாழிடம்


விளைநிலங்கள், அடர்த்தி குறைந்த காடுகள், திறந்த புல்வெளிகள் ஆகியவையை இவற்றின் முதன்மையான வாழிடம். எனினும் இவற்றை நகர்ப்புறங்களில் மின்கம்பிகளின் மீது அமர்ந்திருக்கக் காணலாம்.


இயல்புகள்


இப்பறவைகள் சிறு பூச்சிகள், ஊர்வன, தவளை முதலானவற்றை உணவாகக் கொள்ளும். இவை தான் பிடித்த இரையை மேலே தூக்கிப் போட்டுப் பிடித்து உண்ணும். மார்ச் முதல் சூன் வரையான காலம் இவற்றின் இனப்பெருக்க காலம். தன் இணையைக் கவர இவை மேலே இருந்து சுழன்று சுழன்று பறந்து கீழே வந்து, மீண்டும் மேலே ஏறிப் பறக்கும் இயல்பைக்கொண்டதாகும். பொதுவாக மரப்பொந்துகளில் மூன்று முதல் ஐந்து வரை முட்டைகள் இடும்.


இந்தியப் பண்பாட்டில் பனங்காடை


இப்பறவை கர்நாடகா, ஆந்திரா, ஒரிசா, பீகார் மாநிலங்களின் மாநிலப்பறவையாக அறிவிக்கப்பட்டுள்ளது. பனங்காடையைப் பார்த்தால் நல்ல சகுனம் என்றும் ஒரு நம்பிக்கை உண்டு.


முன்பு மேனாட்டுச்சீமாட்டிகள் உடையலங்காரத்திற்கு இதன் சிறகுகளைப் பயன்படுத்தியதால் இவை வேட்டையாடப்பட்டு இதன் இறகுகள் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தன.


வெளி இணைப்புகள்

பனங்காடை – விக்கிப்பீடியா

Indian roller – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published.