பக்கி (nightjar), நடுத்தர அளவுள்ள மங்கிய வெளிச்சத்தில் இரைதேடும் பறவை ஆகும். இதற்கு பாதுகைக் குருவி என்ற இன்னொரு பெயரும் உண்டு ஏனென்றால் இது தரையில் உட்கார்ந்து இருக்கும்போது கவிழ்த்துப்போட்ட செருப்புபோல காணப்படும். இது நீண்ட இறக்கைகளும் குட்டைக் கால்களையும் சிறிய அலகினையும் உடையது. இவை பெரும்பாலும் தரையில் கூடு கட்டி வாழக் கூடியவை.
பக்கிப் பறவைகள் உலகின் பல இடங்களில் காணப்படுகின்றன. அந்திப் பொழுதிலும் வைகறைப் பொழுதிலும் இரை தேடும் இவை பெரிய பூச்சிகளை இரையாக உண்கின்றன. ஆந்தைகளைப் போல் இவையும் ஒரு இரவில் இரைகளைத் தேடி உண்ணும் பழக்கம் கொண்டவை.