தட்டைவாயன்

தட்டைவாயன் எனவும் அழைக்கப்படும் ஆண்டி வாத்து (Northern Shoveller – Anas clypeata) ஐரோப்பா, வட அமெரிக்காவிலும் ஆசியாவின் வட பகுதியிலும் இனப்பெருக்கம் செய்து குளிர்காலத்தில் தென் பகுதிகளுக்கு இடம்பெயரும் ஒரு வகை வாத்து. இது இந்தியாவில் அக்டோபர் முதல் ஏப்ரல் வரை இருந்து விட்டுப் பின் வலசை போகின்றது.


இனங்காண உதவும் களக் குறிப்புகள்


 • தடித்த துடுப்பு போன்ற அலகு இவ்வாத்தை மற்றெல்லா இந்திய வாத்துகளிலிருந்தும் வேறுபடுத்துகிறது; அலகின் நுனி விரிந்து காணப்படும்.

 • முதிர்ந்த ஆண் வாத்தின் தலையும் கழுத்தும் அடர் பச்சை நிறத்தில் ஊதா கலந்து இருக்கும்; தோள்பட்டை செம்பழுப்பு நிறத்திலும் கால்கள் செம்மஞ்சள் (ஆரஞ்சு) நிறத்திலும் இருக்கும்.

 • கள இயல்புகள்


  ஆண்டி வாத்துகள் தனியாகவோ இணையுடனோ சிறு கூட்டமாகவோ காணப்படுகின்றன; ஆகவே, பரவலாக இவை காணப்பட்டாலும் பிற வாத்துகளைப் போல் அதிக எண்ணிக்கையில் பெருங்கூட்டமாக இவற்றைக் காண இயலுவதில்லை. சேற்றுநீரை சலிப்பதற்கு ஏதுவாக இதன் அலகு உள்ளதால் (அலகின் உட்புறம் இருக்கும் சீப்பு போன்ற அமைப்புகள் – பற்கள் அன்று – சலித்தலை செய்கின்றன) சேற்றுநீரில் காணப்படும் நுண்ணிய வெளி ஓடுடைய கிளாடோசெரன்களையும் சிரோனிமிட் என்றொரு வகை நுண்புழுக்களையும் சலித்து உண்கின்றன.


  வெளி இணைப்புகள்

  தட்டைவாயன் – விக்கிப்பீடியா

  Northern shoveler – Wikipedia

  About the author

  Leave a Reply

  Your email address will not be published.