தொல்லுலகச் சிட்டுகள்

தொல்லுலகச் சிட்டுகள் (Old World Sparrow) என்பவை சிறிய குருவிகளின் குடும்பம் ஆகும். இவை உண்மையான சிட்டுகள் என்றும் அழைக்கப்படுகின்றன. உண்மையான சிட்டுகள் என்ற பெயர் குறிப்பாக இக்குடும்பத்தின் கீழ் உள்ள பேரினமான பேசர் (Passer) பேரினத்தைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது. இந்தியாவில் இவை வீட்டுக்குருவிகள், அடைக்கலக்குருவிகள் ,ஊர்க்குருவிகள், சிட்டுக்குருவிகள் ஆகிய பெயர்களால் அழைக்கப்படுகின்றன. காகத்திற்கு அடுத்து மனிதனுக்கு நன்கு அறிமுகமான பறவை குருவியாகும்.


உடல் அமைப்பு


சிட்டுக் குருவிகள் உருவத்தில் சிறியனவாகவும், இளம் சாம்பல் கலந்த பழுப்பு நிறத்தி்லும் இருக்கும். சிறிய அலகு, சிறிய கால்களுடன் காணப்படும். இவை 8 முதல் 24 செ.மீ நீளமுள்ளவை. பழுப்பு சாம்பல், மங்கலான வெள்ளை என்று பல நிறங்களில் காணப்படும். கூம்பு வடிவ அலகுகளைப் பெற்ற இவை 27 முதல் 39 கிராம் எடை கொண்டவை. ஆண் பறவையில் இருந்து பெண் பறவை வேறுபட்டது. மேற்பாகம் தவிட்டு நிறத்தில் மஞ்சளும் கறுப்பும் கலந்த கோடுகள் கொண்டிருக்கும். அடிப்பாகம் வெளுப்பாக இருக்கும்.


வசிப்பிடம்


ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா, அமெரிக்கா போன்ற பல நாடுகளில் குருவி இனங்கள் உள்ளன. இவை எங்கும் காணப்படுபவை. சிட்டுக் குருவிகளின் வாழ்நாள் சுமார் 13 ஆண்டுகளாகும். சிட்டுக்குருவிகள் மனிதர்கள் இருக்கும் பகுதிகளிலேயே வசித்தாலும் மனிதர்களோடு பழகுவதில்லை. இவற்றை செல்லப் பறவைகளாக வளர்க்க முடியாது. மரத்திலும், வீடுகளின் மறைவான இடங்களிலும் வைக்கோல் போன்ற மெல்லிய பொருட்களைக் கொண்டும் கூடு கட்டி வசிக்கின்றன . இவற்றின் கூடுகள் கிண்ண வடிவில் இருக்கும். இவை குளிர் காலத்தில் கூட்டமாக ஒரு புதரில் ஒன்று சேர்ந்து இரவைக் கழிக்கின்றன.


உணவுப் பழக்கம்


சிட்டுக் குருவிகள் அனைத்துண்ணிகள்.தானியங்களையும், புழு, பூச்சிகளையும் உணவாக உட்கொள்ளும். சில வகைக் குருவிகள் பூ மொட்டுகளையும் உண்ணும்.


வாழ்க்கைமுறை


சிட்டுக் குருவிகள் முட்டையிட்டுக் குஞ்சு பொரித்து இனப்பெருக்கம் செய்கின்றன. மூன்று முதல் ஐந்து முட்டைகள் வரை இடும். முட்டைகள் பச்சை கலந்த வெள்ளை நிறத்தில் இருக்கும். ஆண், பெண் இரண்டுமே முட்டைகளையும், இளம் உயிரிகளையும் பாதுகாத்து வளர்க்கின்றன. குஞ்சுகள் பெரிதாகும் வரை கூட்டிலேயே வளர்கின்றன; பறக்கத் தொடங்கியவுடன் தனியே பிரிந்து விடுகின்றன.


சிட்டுக் குருவியின் வகைகள்


 • மெல்லிய கோடுகளைக் கொண்ட புல்வெளிக் குருவிகள்

 • மாலைச் சிட்டுகள்

 • காட்டில் வாழும் நரிச் சிட்டுகள்

 • வெண்கொண்டையும் வெண்மையான தொண்டையும் கொண்ட குருவிகள்

 • கறுப்புச் சிட்டுகள்

 • வெள்ளைக் கோடுகள் உடைய கொண்டையைப் பெற்றவை

 • வீட்டுச் சிட்டுக்குருவி

 • என குருவிகளில் பல வகைகள் உள்ளன.


  தமிழ் இலக்கியங்களில் சிட்டுக் குருவி


  சிட்டுக்குருவியில் இரண்டு இனங்கள் உண்டு.
  சிட்டுக்குருவியைச் சிய்யான் குருவி என்றும் கூறுவர்.


  அருகி வரும் இனம்


  சுற்றுச் சூழல் மாற்றங்களால் நாம் ஏற்படுத்தும் பல இழப்புகளில் மரங்களும் பறவைகளும் உலகெங்கும் அழிந்தும், குறைந்தும் வருவதால் சுற்றுச் சூழல் சீர்கெட்டு உலகம் வெப்பமயமாகி இயற்கைப் பேரழிவுகள் நேர்கின்றன. தற்போது பல நகர்ப்புறங்களில் இவை முற்றிலுமாக அழிந்துவிட்டன அலைபேசியில் இருந்து வெளிவரும் (நுண்ணலைகள்) மின்காந்த அலைகளின் தாக்கம் இந்த குருவியினத்தின் இனபெருக்க மண்டலத்தை தாக்கி அவற்றை மலடாக மாற்றி விடுவதனால் இவற்றால் தங்களின் இனத்தை பெருக்க இயலவில்லை என கண்டறியப்பட்டுள்ளது. இப்பறவையை பாதுகாக்க சிலர் முயற்சி எடுத்துவருகின்றனர். இந்த இனத்தின் அழிவு நிலையைக்கண்டு புதுச்சேரி பகுதியில் உள்ள ஒரு தம்பதிகள் அவர்களின் வீட்டில் கூடுகள் அமைத்து பராமரித்து வருகின்றனர். உலகம் முழுவதும் மார்ச் 20ம் தேதியை சிட்டுக்குருவிகள் தினமாக கொண்டாடுகிறார்கள். மதுரையில் இந்த குருவிக்காக ஒரு கோவிலை சுதந்திர போராட்ட வீரர் கோவிந்தசாமி என்பவர் கட்டியுள்ளார்.


  உலக ஊர்க்குருவிகள் நாள்


  சிட்டுக் குருவி இனத்தை அழியாமல் காக்க வேண்டும் என்று சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் வேண்டி வருகிறார்கள். எனவே மார்ச் 20 ஆம் தேதியை உலக ஊர்க்குருவிகள் தினமாகக் கொண்டாடி அவற்றைக் காக்கப் போராடி வருகின்றனர். இதனை உணர்த்தும் வகையில் பல நாடுகள் அஞ்சல் தலைகள் வெளியிட்டுப் பெருமைப் படுத்தியுள்ளன.


  வெளி இணைப்புகள்

  தொல்லுலகச் சிட்டுகள் – விக்கிப்பீடியா

  Old World sparrow – Wikipedia

  About the author

  Leave a Reply

  Your email address will not be published.