சின்ன மீன்கொத்தி (Oriental Dwarf Kingfisher) என்பது மஞ்சள் நிறமான அடிப்புறமும் கருப்பு, நீல நிறமான முதுகுப்பக்கமும் உடைய சிறிய அளவிலான ஒரு மீன்கொத்தி. இப்பறவை அடர்ந்த நிழல் படிந்த காடுகளில் சிறு நீரோடைகளின் அருகே வசிக்கும். பல்லிகள், நத்தை, தவளை போன்ற சிறிய உயிரினங்களை இரையாகக் கொள்கிறது. இப்பறவைகள் பங்களாதேசம், பூட்டான், சீனா, இந்தியா, இலங்கை, மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகள் சிலவற்றிலும் காணப்படுகின்றன.
இப்பறவை நான்கு முதல் ஐந்து முட்டைகள் வரை இடும். ஆண், பெண் இரு பறவைகளும் முட்டைகளை அடைகாக்கும்.