மஞ்சள் மூக்கு நாரை

மஞ்சள் மூக்கு நாரை (Painted Stork, Mycteria leucocephala), வண்ண நாரை அல்லது செவ்வரி நாரை சங்குவளை நாரை என்பது நாரைக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பறவை ஆகும். மஞ்சள் மூக்கு நாரைகள் குறைவாகவே வலசை போகின்றன. இவை மரங்களில் கூடுகட்டுகின்றன. இவை இந்தியத் துணைக்கண்டப் பகுதிகளிலும், தென் இமயமலைப் பகுதிகளிலும் காணப்படும். இந்தப் பறவைகளுக்கு நீர்வாழ் உயிரினங்கள்தாம் முக்கிய உணவு.


முட்டையிட எங்கே கூடு கட்டுவது என்பதை ஆண்பறவையே முடிவு செய்யும். அந்த இடத்தைப் பார்த்துவிட்டு, அந்த ஆண் பறவையுடன் கூடுவது குறித்து பெண் பறவை முடிவு செய்யும். பெண்பறவையுடன் கூட ஆண் பறவைகளுக்கிடையே கடும் போட்டி இருக்கும் சூழல் இருந்தால், அந்தப் பறவைகளில் எந்த ஆண் பறவை மிக உயரமாக இருக்கிறதோ, அதனோடு இணைசேர பெண் பறவை முடிவுசெய்யும். பெண்பறவையானது இரண்டு முதல் ஐந்து முட்டைகள்வரை இடும். குஞ்சுகளுக்குத் தாய், தந்தை என இரண்டு பறவைகளும் இரை தேடிக்கொண்டு வரும். இவற்றின் அலகுகள் நீண்டதாக இருப்பதால், குஞ்சுகளுக்கு ஊட்ட ஒரே நேரத்தில் ஐந்தாறு சின்னச் சின்ன மீன்களைக்கூட கவ்விக்கொண்டு வரும்.


வெளி இணைப்புகள்

மஞ்சள் மூக்கு நாரை – விக்கிப்பீடியா

Painted stork – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published.