மயில், பசியானிடே குடும்பத்தின், பேவோ (Pavo) பேரினத்திலுள்ள இரண்டு இனங்களையும் (தெற்காசியாவில் தென்படும் இந்திய மயில் / நீல மயில், மற்றும் பச்சை மயில்), Afropavo எனும் பேரினத்தைச் சேர்ந்த, ஆப்பிரிக்காவில் தென்படும் காங்கோ மயிலையும் குறிக்கும். மயில்கள் ஆண்மயிலின் ஆடம்பரமான தோகைக்காகப் பெயர் பெற்றது. ஆண்மயில் பெண் மயிலைக் கவர்வதற்காக தோகையை விரித்து ஆடும். ஆண் மயில்கள் அழகிய, பளபளப்பான, நீலம் கலந்த பச்சை நிறமுடையவை. இதன் தோகையில் வரிசையாகக் ‘கண்’ வடிவங்கள் உள்ளன. தோகையை விரிக்கும் போது இவை மிகவும் அழகாகத் தோற்றமளிக்கின்றன. பெண் மயில்களின் உடல் மங்கலான பச்சையும், பளபளப்புக் கொண்ட நீலமும், பச்சை கலந்த சாம்பல் நிறமும் கலந்தது. நீண்ட தோகை பெண் மயில்களுக்குக் கிடையாது. நீண்டதூரம் பறக்க இயலாத மயில்கள் உயரமான மரங்கள் போன்றவற்றில் ஏறி அமர்ந்துக் கொள்ளும்.
பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தினால் உருவாக்கப்படும் செம்பட்டியலின் குறிப்பின்படி, காங்கோ மயில் இனமானது அழிவாய்ப்பு இனமாகவும், பச்சை மயில் அருகிய இனமாகவும், இந்திய மயில் தீவாய்ப்புக் கவலை குறைந்த இனமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது..
மயிலின் வகைகள்
இந்திய மயில்
இந்திய மயில் (பேவோ கிறிஸ்ட்டாட்டஸ் – Pavo cristatus) இந்திய துணைக்கண்டத்தை பூர்வீகமாகக் கொண்ட பறவையினமாகும். இவை இந்தியாவிலும், இலங்கையிலும் அதிகமாக இருக்கின்றன. ஆயினும் உலகின் வேறு பல நாடுகளிலும் இவை அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கின்றன. பல்வேறு கிராமங்களில் வீடுகளில் மயில் வளர்க்கப்படுகிறது.
இவற்றில் ஆண்மயில்கள் தலை, கழுத்து மற்றும் நெஞ்சுப் பகுதிகளில் பிரகாசமான நீல நிறத்தைக் கொண்டிருப்பதுடன், வால்ப் பகுதியில் நீலமும், பச்சையும் கலந்த மிக நீண்ட சிறகுகளையும், கண் போன்ற அமைப்புக்களையும் கொண்ட தோகையையும் கொண்டிருக்கும். தோகையானது அண்ணளவாக உடலின் நீளத்தில் மூன்றில் இரண்டு பகுதியை உள்ளடக்கியதாக இருக்கும்.
பச்சை மயில்
பச்சை மயில் (பேவோ மியூட்டிக்கஸ் – Pavo muticus), மியன்மார் கிழக்கு தொடக்கம் ஜாவா வரையுள்ள பகுதியில் வாழ்கின்றன. தென்கிழக்காசிய நாடுகளிலுள்ள வெப்பவலயம்|வெப்பவலயக்]] காடுகளில் இந்த இனம் காணப்படுகின்றது. ஜாவா, இந்தோனேசியாவில் காணப்படும் குறிப்பிட்ட துணையினமானது ஜாவா மயில் எனவும் அழைக்கப்படுகிறது. பச்சை மயில் இனமானது இந்திய மயில் இனத்துடன், மிக நெருங்கிய தொடர்புடையதாக இருக்கிறது. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம், பச்சை மயில்களை, அழியும் அபாயமுள்ளவையாகப் பட்டியலிட்டுள்ளது. வேட்டையாடுவதாலும், உகந்த வாழிடங்கள் குறைந்து வருவதாலும் இவ்வபாயம் உள்ளது.
பச்சை மயில்களில் ஆண்மயில்களின் கழுத்துப் பகுதி பச்சை நிறத்தில் இருப்பதனால், இவை இந்திய மயில்களிலிருந்து வேறுபடுகின்றன.
காங்கோ மயில்
காங்கோ மயில் (அப்ரோபேவோ – Afropavo congensis) காங்கோ ஆற்றை அடிப்படையாக வைத்து உருவான காங்கோ வடிநிலத்தைப் பூர்வீகமாகக் கொண்ட ஒரு பறவையினமாகும். இவை நில்லமயில், பச்சை மயில் போன்று மிக நீண்ட தோகையைக் கொண்டிருப்பதில்லை.
இலக்கியத்தில் மயில்
பிற தகவல்கள்
மயிலிறகு
ஆண் மயில்களில், வால்ப் பகுதியின் மேலாகக் காணப்படும் நீண்ட வண்ணமயமான இறகுகளின் தொகுப்பு மயிற்பீலி, மயில் தோகை, மயிலிறகு என்று வெவ்வேறு பெயர்கொண்டு அழைக்கப்படுகிறது.
விளக்கம்
இந்த அழகிய மயிலிறகு பல வண்ணங்களைக் கொண்டிருக்கும். பச்சை, மஞ்சள், நீலம், கருநீலம் போன்ற பல வண்ணம் கொண்ட அழகிய இயற்கை ஓவியம் போல காணப்படும்.
நம்பிக்கைகள்
இந்து கடவுள்கள் பலரை மயிலிறகு அலங்கரிக்கும். இதன் மூலம் கிருஷ்ணர், முருகன், லட்சுமி போன்ற கடவுள்கள் அலங்கரிப்பர். அதனால்,தெய்வீகத் தன்மை பொருந்தியதாக பார்க்கப்படுகிறது. சீனாவில் அதிர்ஷ்டத்தின் சின்னமாக கருதப்படுகிறது. இது நேர்மறையான எண்ண அலைகளை ஈர்க்கும் என்று சொல்கிறார்கள்.
பயன்பாடு
மயில் சிறகுகளை விரித்து வானில் பறக்கும்.