ஊதாப்பிட்டு தேன்சிட்டு, ஊதாப்பிட்டத் தேன்சிட்டு என்றும் அழைக்கப்படும் ஊர்த் தேன்சிட்டு (Purple-rumped Sunbird) என்பது இந்திய துணைக்கண்டத்திலுள்ள ஒரு தேன்சிட்டு வகை பறவை. ஏனைய தேன்சிட்டுக்களைப் போன்று இவை சிறிய அளவான பறவையாகும். உணவாக மலர்த்தேனையும் சிலவேளைகளில் சிறிய பூச்சிகளையும், குறிப்பாக குஞ்சுகளுக்குக் கொடுக்கின்றன. இவற்றின் கூடு தொங்கும் பை போன்ற அமைப்பையுடையது. இது ஒட்டடை, மரப்பாசி மற்றும் தாவரப் பொருட்கள் கொண்டு செய்யப்படும். ஆண் பிரகாசமான நிறத்தைக் கொண்டும், பெண் மங்கலான மஞ்சள் மற்றும் ஒலிவ் நிறமுடையது
வெளி இணைப்புகள்
ஊதாப்பிட்டத் தேன்சிட்டு – விக்கிப்பீடியா
Purple-rumped sunbird – Wikipedia