காணான்கோழி அல்லது கூவாங்கோழி (rails, Rallidae) என்பது உலகெங்கிலும் பரந்து வாழும் சிறிய அளவினதாகவும் நடுத்தர அளவினதாகவும் காணப்படும் பறவையாகும். இப்பறவைக் குடும்பத்தின் இலத்தீனப் பெயர் Rallidae என்பது இப்பறவைகள் எழுப்பும் ஒலியின் பெயரால் எழுத்தது (“on account of its rasping cry”) பேரினத்தின் பெயராகிய இக்குடும்பப் பறவைகள் உயிரியற் பல்வகைமை உடையதும் சில வகை (crakes, coots, gallinules) கானாங்கோழிகளைக் கொண்டதும் ஆகும். பல இனங்கள் ஈரளிப்பான பகுதிகளில் வாழ்பவையும், பாலைவனங்கள், பனி படராத இடங்கள் தவிர்த்து தரைவாழ் பறவையாகும். கானாங்கோழிகள் அந்தாட்டிக்கா தவிர்ந்த ஏனைய கண்டங்களில் காணப்படுகின்றன. இவற்றில் பல வகைகள் தீவினுள் வாழும் இனங்களாக உள்ளன. பல பறவைகள் சதுப்பு நிலங்களிலும் அடர்த்தியான காடுகளையும் வாழ்விடமாகக் கொண்டன. இவை நெருக்கமான தாவர அமைப்பை விரும்புவனவாகும்.
About the author
Related Posts
September 16, 2021
இந்தோ-சீன பறக்கும் அணில்
October 8, 2021
வண்ணந்தீட்டியக் கவுதாரி
September 27, 2021